ஓரினச் சேர்க்கைக்கு உடன்படாத 8 வயது சிறுவனின் கழுத்தை நெரித்துக் கொன்ற காமுகன் கைது!!

Read Time:2 Minute, 1 Second

83d611f3-bfb6-48eb-bfee-18ece600b9b7_S_secvpfஓரினச் சேர்க்கைக்கு உடன்படாத 8 வயது சிறுவனின் கழுத்தை நெரித்து படுகொலை செய்த 18 வயது காமக்கொடூரனை போலீசார் கைது செய்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சவாய்மதோப்பூர் பகுதியை சேர்ந்த 8 வயது சிறுவனை சாக்லேட் தருவதாக ஆசைகாட்டி தனிமையான இடத்துக்கு அழைத்துச்சென்ற ஆமிர் கான்(18) என்பவன் அவனை ஓரினச் சேர்க்கைக்கு உடன்படுமாறு வற்புறுத்தினான். இதற்கு சம்மதிக்காத அந்த சிறுவன் இந்த விவகாரத்தை தனது பெற்றோரிடம் கூறப்போவதாக தெரிவித்தான்.

இதனால் ஆத்திரமடைந்த ஆமிர் கான் அந்த சிறுவனின் கழுத்தை நெரித்துக்கொன்று விட்டு தலைமறைவாகி விட்டான்.

நேற்றிரவில் இருந்து அந்த சிறுவன் வீடு திரும்பாததை கண்டு பதறிய பெற்றோர் அவனை தேடிவந்தனர். இது தொடர்பாக போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று காலை வயல்காட்டில் அந்த சிறுவன் பிணமாக கிடந்தான். நேற்று மாலை அந்த சிறுவனை ஆமிர் கானுடன் பார்த்ததாக சிலர் தெரிவித்தனர்.

இதனையடுத்து, தலைமறைவாக இருந்த அவனை போலீசார் கைது செய்தனர். அவனிடம் நடத்திய விசாரணையில் ஓரினச் சேர்க்கைக்கு உடன்பட மறுத்ததுடன், இது தொடர்பாக வெளியே சொல்லி விடுவேன் என மிரட்டியதால் அந்த சிறுவனை கொன்றுவிட்டதாக அந்த காமக்கொடூரன் வாக்குமூலம் அளித்துள்ளான்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மணல் கடத்தலை தடுத்த சப்–இன்ஸ்பெக்டரை டிராக்டர் ஏற்றி கொல்ல முயற்சி: 2 வாலிபர்கள் கைது!!
Next post ஆரல்வாய்மொழி அருகே வீடு புகுந்து பெண்ணை கத்தியால் குத்திய வாலிபர்கள்: போலீசார் விசாரணை!!