டெல்லியில் சிக்கிம் பெண்ணை கடத்தி கற்பழித்த எய்ம்ஸ் டாக்டர் உள்பட 5 பேர் கைது!!

Read Time:1 Minute, 46 Second

de6a8d31-b61d-4a8c-b7c7-1334055cec77_S_secvpfடெல்லியில் சிக்கிம் பெண்ணை கடத்தி கற்பழித்தது தொடர்பாக எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தெற்கு டெல்லியின் முனிர்கா பகுதியில் வசித்து வரும் 25 வயதான சிக்கிம் பெண் ஒருவர், மருத்துவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக புகார் அளித்தார். ராணுவ வீரரின் மனைவியான அந்த பெண் அளித்த புகாரில், சிக்கிமிலிருந்து வேலை தேடி டெல்லிக்கு வந்த தன்னை அடையாளம் தெரிந்த சிலர் நேற்றிரவு, அந்த மருத்துவரின் வீட்டிற்கு கடத்தி சென்றதாகவும், அங்கு மருத்துவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில் அவுஸ் காஸ் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் குற்றம் சாட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனையின் நரம்பியல் துறை மருத்துவர் மெஹர் தேஜ் (27) என்பவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி அவரை கைது செய்தனர்.

மேலும், அந்தப் பெண்ணை கடத்தி விபச்சாரத்தில் தள்ளியதாக சுமன் (37), அவரது கணவர் தீபக் என்ற சாகர் (40), தரம்வீர் (32), கமால் (31) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புகையிலை கொடுக்காததால் கொத்தனாரின் உடல் முழுவதும் பிளேடால் கிழித்த நண்பர்!!
Next post இந்தியாவில் யாருக்கும் எபோலா நோய் பாதிப்பு இல்லை: பாராளுமன்றத்தில் மத்திய மந்திரி தகவல்!!