2 ஆண்டுகளுக்கு முன்னர் ஆபரேஷனின் போது பெண்ணின் வயிற்றில் டாக்டர்கள் மறந்து வைத்து தைத்த நூல்கண்டு!!

Read Time:1 Minute, 26 Second

b5a2e8d8-0173-4389-8c77-28568cb5ee93_S_secvpfகேரள மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு இங்குள்ள வர்காலா மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 2012-ம் ஆண்டு வயிற்றில் ஆபரேஷன் நடைபெற்றது. சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பிய அந்த பெண் 6 மாதங்களுக்கு பிறகு கடுமையான வயிற்று வலியால் துடித்தார்.

தீராத இந்த வயிற்று வலிக்கு சுமார் 2 ஆண்டுகளாக பல ஆஸ்பத்திரிகளில் வைத்தியம் பார்த்தும் குணமாகவில்லை.

இதனையடுத்து, தலைநகர் திருவனந்தபுரம் அருகில் உள்ள வெஞ்சாரம்மூடு பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு சமீபத்தில் சென்றார்.

அவரது வயிற்று பகுதியை ‘ஸ்கேன்’ செய்து பார்த்தபோது, அந்த பெண்ணின் கருப்பை அருகே சிக்கலும், முறுக்கலுமாக ஆபரேஷனுக்கு பிந்தைய தையல் போடும் நூல்கண்டு கிடப்பது தெரியவந்தது. இரு தினங்களுக்கு முன்னர் நடத்தப்பட்ட ஆபரேஷன் மூலம் அந்த நூல்கண்டு வெற்றிகரமாக அகற்றப்பட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வளசரவாக்கத்தில் இளம்பெண்ணை காரில் வைத்து விபசாரம்: சினிமா நடிகர் கைது!!
Next post சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட பாலியல் வன்புணர்வு வீடியோ: தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது உச்ச நீதிமன்றம்!!