திருவண்ணாமலையில் முட்புதரில் குழந்தையை வீசிய பெண் யார்?: போலீஸ் விசாரணை!!

Read Time:2 Minute, 20 Second

ade4ed15-e660-4d7f-a46d-b04c8c8d46e9_S_secvpfதிருவண்ணாமலை–செங்கம் சாலையில் அரசு கலைக்கல்லூரி இயங்கி வருகிறது. நேற்று காலை சுமார் 8.30 மணியளவில் கல்லூரி வளாகம் அருகேயுள்ள முட்புதரில் பச்சிளங்குழந்தை ஒன்று அழும் சத்தம் கேட்டது.

குழந்தையின் அழும் குரல் கேட்டு அந்த வழியாக நடந்து சென்ற பொதுமக்கள் முட்புதர் அருகே சென்று பார்த்தனர். அங்கு பிறந்து சில மணி நேரங்களே ஆன பெண் குழந்தை ஒன்று பையில் சுற்றப்பட்ட நிலையில் கிடந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் பச்சிளங்குழந்தையை உடனடியாக சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இது குறித்து திருவண்ணாமலை டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

மருத்துவமனையில் குழந்தைகள் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

குழந்தையின் உடல்நிலை குறித்து மருத்துவமனை குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் சுரேஷ் கூறுகையில், ‘இந்த குழந்தை பிறந்து சில மணி நேரங்களில் முட்புதரில் வீசப்பட்டுள்ளது. குழந்தை 30 வாரங்களில் அதாவது 7½ மாதத்தில் பிறந்துள்ளது. பிறந்த குழந்தையின் எடை சராசரியாக 2½ கிலோவில் இருந்து 3 கிலோ வரை இருக்க வேண்டும். ஆனால் இந்த பெண் குழந்தை 1½ கிலோ எடையே உள்ளது என்றார்.

கள்ளக்காதலில் பிறந்ததால் குழந்தையை முட்புதரில் வீசி சென்றார்களா? அல்லது பெண் குழந்தை என்பதால் வீசி சென்றார்களா? என தெரியவில்லை. முட்புதரில் குழந்தையை வீசி சென்ற கல்மனம் கொண்ட தாய் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காதலியை ஆபாச படம் எடுத்ததாக கூறி மிரட்டியவர் கைது!!
Next post விண்வெளியில் ஆட்சி செலுத்தும் இந்தியாவின் 27 செயற்கைக் கோள்கள்: மத்திய மந்திரி பெருமிதம்!!