விண்வெளியில் ஆட்சி செலுத்தும் இந்தியாவின் 27 செயற்கைக் கோள்கள்: மத்திய மந்திரி பெருமிதம்!!

Read Time:3 Minute, 58 Second

77a3cb4e-2baf-4f9f-af3b-a6658c184289_S_secvpfவிண்வெளி துறை தொழில்நுட்பத்தில் இந்தியா அளப்பரிய சாதனைகளை செய்து வருவதாகவும் இந்த தொழில்நுட்பத்தில் உலகின் முன்னோடி நாடுகளில் ஒன்றாக இந்தியா உயர்ந்துள்ளதாகவும் பிரதமர் அலுவலக இணை மந்திரி ஜித்தேந்திரா சிங் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்றைய கேள்வி நேரத்தின்போது இது தொடர்பாக பதில் அளித்த ஜித்தேந்திரா சிங், விண்வெளி துறை தொழில்நுட்பத்தில் உலகின் முன்னோடி நாடுகளில் ஒன்றாக இந்தியா உயர்ந்துள்ளதாகவும், குறிப்பாக, கடந்த 7-8 மாதங்களில் மிகப் பெரிய வளர்ச்சியை எட்டியுள்ளதாகவும் பெருமையுடன் குறிப்பிட்டார்.

செயற்கைக் கோள்களை ஏவும் தொழில்நுட்பத்தில் சார்க் நாடுகளில் இந்தியா தலைமை இடத்தை பிடிக்கும் என தெரிவித்த அவர், நமது விண்வெளித் துறை தொழில்நுட்ப வசதிகளை பிற நாடுகள் பயன்படுத்திக் கொள்ள அனுமதிப்பதன் வாயிலாக இந்தியாவுக்கு வருமானம் கிடைத்து வருவதாகவும் கூறினார்.

இந்த துறையில் நாம் மிக துல்லியமான தொழில்நுட்ப மேம்பாட்டை எய்தியுள்ளதால் பல நாடுகளை விட நாம் முன்னோடியாக திகழ்கின்றோம். இதனால், தங்களது செயற்கைக் கோள்களை இந்தியாவில் இருந்து ஏவ நிறைய சிறிய நாடுகள் விருப்பம் காட்டி வருகின்றன.

இந்தியாவின் 27 செயறகைக் கோள்கள் தற்போது விண்வெளியில் வெற்றிகரமாக சுற்றி வந்து கொண்டுள்ளன. இவற்றில் 12 செயற்கைக் கோள்கள் பூமியை கண்காணித்து வருகின்றன. 11 செயற்கைக் கோள்கள் தொலைத்தொடர்பு இணைப்புகளை நிர்வகித்து வருகின்றன. 3 செயற்கைக் கோள்கள் திசை மற்றும் வழிகாட்டும் (நேவிகேஷனல்) சேவையாற்றுகின்றன.

மற்றொரு செயற்கைக் கோளான ’மங்கல்யான்’ செவ்வாய் கிரகத்தை சுற்றிவந்து ஆய்வு நடத்துகின்றது. மொத்தம் 27 இந்திய செயற்கைக் கோள்கள் விண்வெளியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. அடுத்த மாதம் மேலும் ஒரு செயற்கைக் கோள் ஏவப்பட உள்ளது. அடுத்தடுத்து, மேலும் பல செயற்கைக் கோள்களை ஏவும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

கடந்த ஜுன் மாதம் 5 செயற்கைக் கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதன் மூலம் வணிகரீதியிலான செயற்கைக் கோள்களை ஏவும் சந்தையிலும் தடம் பதித்துள்ள இந்தியா, எதிர்கால செயற்கைக் கோள் திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டியுள்ளது.

புயல் மற்றும் இயற்கை பேரழிவு தொடர்பாக இந்தியாவின் கணிப்புகள் அனைத்தும் துல்லியமாக அமைந்துள்ளதால் வானிலை ஆய்வுத் துறையிலும் சமீபகாலமாக இந்தியா சிறப்பிடம் வகித்து வருகின்றது என ஜித்தேந்திரா சிங் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருவண்ணாமலையில் முட்புதரில் குழந்தையை வீசிய பெண் யார்?: போலீஸ் விசாரணை!!
Next post காதலனை கத்தியால் குத்தி கொன்று விட்டு கல்லூரி மாணவியை கற்பழிக்க முயன்ற சைக்கோ வாலிபர்!!