அனந்தியால் பிள்ளையை இழந்தவர் யாரை எரிப்பது மறைமுகமாக கேட்ட பிரதி அவை தலைவர்!!
இராணுவம் பிடித்தவர்களுக்காக சுமந்திரனின் கொடும்பாவியை எரிப்பது என்றால் புலிகளால் பிடித்துச் செல்லப்பட்டவர்களுக்காக யாருடைய கொடும்பாவியை எரிப்பது? என மாகாண சபையில் அன்ரனி ஜெகநாதன் கேள்வி எழுப்பினார்.
நேற்று வட மாகாண சபையின் 25 ஆவது மாதாந்த அமர்வில் கலந்த கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்து அவர் தனது கருத்தில் சுமந்திரனின் கொடும்பாவி திட்டமிட்டு எரிக்கப்பட்டது. இதே போல புலிகளால் காணாமல் போக காரணமாக இருந்தவர்களின் கொடும்பாவிகள் எரிக்கப்பட தொடங்கினால் நிலைமை என்னவாகும்?
கூட்டமைப்பில் உள்ளவர்களுள் மண்டைவளம் மிக்கவர் சுமந்திரனேயென அவர் குறிப்பிட்டதுடன் அத்துடன் புலிகளால் பிடித்து செல்லப்பட்டவர்களிற்காக யாரது கொடும்பாவியை எரிப்பதெனவும் அவர் கேள்வி அவ்விடத்தில் எழுப்பினார்.
இதன் போது எழுந்த அனந்தி சசிதரன் உணர்ச்சி வசப்பட்டவர்களால் இது எரிக்கப்பட்டது. எனவே திட்டமிட்டு எரித்தது என கூறுவது தவறு என குறுக்கிட்டு பேசினார்.
அதன் போது மீன்பிடி மற்றும் போக்குவரத்து அமைச்சர் டெனீஸ்வரன் அண்மையில் சுமந்திரனின் கொடும்பாவி எரியூட்டப்பட்டமை தொடர்பில் விளக்கியதுடன் விவாதித்தார்.பின்னர் கொடும்பாவி எரித்ததற்கு கண்டனம் தெரிவித்தார்.
தொடர்ந்து இதற்கு ஆதரவாக பேசிய பிரதி அவை தலைவர் அன்ரனி ஜெகநாதன் காணாமல் போனோர் தொடர்பான விவகாரங்களுடன் தொடர்புடைய வடமாகாணசபை உறுப்பினரொருவரே இதன் பின்னணியில் இருப்பதாக தெரிவித்தார்.
இதன் போது மீண்டும் குறுக்கிட்ட உறுப்பினர் அனந்தி சசிதரன் காணாமல் போனவர்களை தேடித்திரியும் அவர்களது குடும்பங்களிற்கே அதன் வலி தெரியும். ஜ.நா விசாரணை அறிக்கை மூலம் நல்லதொரு தீர்வு தமது விடயத்தில் கிடைக்குமென அவர்கள் காத்திருந்தனர். ஆனால் இப்போது சிலர் உள்ளக விசாரணை பற்றி பேசுகின்றார்கள்.
ஏற்கனவே கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக் குழுவிற்கும் அதே போன்று காணாமல் போனவர்களை தேடிக்கண்டறியும் குழு விசாரணைகளிற்கு நடப்பது அனைவரிற்கும் தெரியும். உணர்ச்சிவசப்பட்ட நிலையில் அதனை சிலர் அப்போது செய்திருக்கலாமென அவ்விடத்தில் சுட்டிக்காட்டினார்.
மேலும் அவ்விடத்தில் காணாமல் போனவர்களது குடும்பங்கள் ஜெனீவாவிற்கு எடுத்து செல்லுமாறு மகஜரொன்றை தரப்போவதாக அறிவித்திருந்த நிலையில் அதை பெற்றுக்கொள்ளவே அங்கு சென்றிருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.அடுத்து அன்ரனி ஜெகநாதனின் பேச்சிற்கு குறுக்கிட்டு விளக்கமளிக்க மற்றொரு உறுப்பினரான சர்வேஸ்வரன் முற்பட்ட போது அதற்கு அவைத்தலைவர் அனுமதித்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது நடந்து முடிந்த மாகாணசபை தேர்தலில் தன்னை மாவீரர் குடும்பமென அடையாளப்படுத்தியே அன்ரனி ஜெகநாதன் பிரச்சாரங்களை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating