25 துப்பாக்கி தோட்டாக்களுடன் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் அமெரிக்க பெண் கைது!!

Read Time:1 Minute, 49 Second

0464ef30-e076-4037-8c4c-0e493b1630f8_S_secvpfபஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் டெல்லி செல்வதற்காக பயணிகள் காத்திருந்தனர். பயணிகளின் உடமைகளை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஒரு பெண் தனது பையில் 25 உயிர்ப்புள்ள துப்பாக்கி தோட்டாக்களை மறைத்து வைத்து இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து அந்த பெண்ணை விமானநிலைய போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அந்த பெண்ணின் பெயர் மஞ்சிதா கவுர் திலான் (வயது 52) என்பதும், அமெரிக்காவைச் சேர்ந்த அவர் பஞ்சாபில் உள்ள தனது தாத்தா, பாட்டியை பார்க்க வந்து விட்டு டெல்லி செல்ல இருந்ததும் தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட மஞ்சிதாவிடம் துப்பாக்கி பயன்படுத்துவதற்கான உரிமம் இல்லை. அவர் தனது பையில் தோட்டா இருப்பது குறித்து தனக்கு தெரியாது என்று தெரிவித்தார். மத்திய தொழிற் பாதுகாப்பு படை போலீசார் விசாரணை நடத்தியபின்னர், மஞ்சிதா பஞ்சாப் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

மஞ்சிதா கைது செய்யப்பட்டது குறித்து அமெரிக்க தூதரகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரிடம் கைப்பற்றிய தோட்டாக்கள் இந்தியாவில் கிடைப்பது மிகவும் அரிது என்று விமான நிலைய அதிகாரி தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்தி நடிகர்களின் புதிய சம்பள விபரம்..!!
Next post இன்டர்நெட்டில் பரவும் ஆபாச வீடியோ!!