நடிகைக்கு கொலை மிரட்டல்…!!

Read Time:1 Minute, 48 Second

flora_ashaதமிழில் கஜேந்திரா படத்தில் விஜயகாந்த் ஜோடியாக நடித்தவர் புளோரா ‘சாரி எனக்கு கல்யாணமாயிடிச்சி’, ‘குஸ்தி’, ‘திண்டுக்கல் சாரதி’, ‘கனகவேல் காக்க’ போன்ற தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.

புளோரா சமீபத்தில் ரிலீசான சர்ச்சைக்குரிய மெசஞ்சர் ஆப் காட் என்ற படத்தில் மனித வெடி குண்டாக நடித்து இருந்தார். பெண் தீவிரவாதியை போல் அவரது கேரக்டர் சித்தரிக்கப்பட்டு இருந்தது. இந்த கேரக்டரில் புளோரா நடித்ததற்கு எதிர்ப்புகள் கிளம்பின. மத அமைப்புகளை சேர்ந்த சிலர் இணைய தளங்களில் புளோராவை கண்டித்து கருத்துக்கள் பதிவு செய்தனர்.

தற்போது அவரது மொபைல் போனிலும் தொடர்ந்து மிரட்டல்கள் வருகின்றன. தீர்த்து கட்டி விடுவோம் என்றும் குறும் செய்தி அனுப்புகிறார்கள். இதனால் புளோரா பயந்து போய் இருக்கிறார். மத உணர்வுகளை புண்படுத்தும் நோக்கில் அந்த படத்தில் நடிக்கவில்லை என்றும் எல்லா மதங்களையும் மதிக்கிறேன் என்றும் விளக்கம் அளித்தார். ஆனாலும் தொடர்ந்து மிரட்டல்கள் வருகின்றன.

இதையடுத்து தனக்கு பாதுகாப்பு அளிக்கும்படி போலீசில் அவர் புகார் அளித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அம்மா முதல்வராகக் கோரி தன்னை சிலுவையிலறைந்த கராத்தே மாஸ்டர்!!
Next post மேகாலயாவில் சூனியம் வைத்ததாக கூறி 5 பேர் கொன்று புதைப்பு: உடல்களை தோண்டியெடுத்து போலீசார் விசாரணை!!