காணாமல் போனவர்களின் போராட்டங்களை இழிவுபடுத்தும், தமிழரசுக் கட்சி அன்ரனி ஜெகநாதன்: இவரை ஈன்றவள் மேல் சபதம் செய்ய தயாரா? -ஈழமகன்!!
காணாமல் போனோரின் உறவினரை இழிவுபடுத்தி அவர்களின் போராட்டத்தை நியாயமற்ற போராட்டமாக சித்தரிப்பதற்கு முற்படுகிறார் அன்ரனி ஜெகநாதன். பணத்தைக் கொடுத்து அரசியலுக்கு வந்தவர்கள் எவ்வாறு தமிழ் மக்களுக்கு விசுவாசிகளாகச் செயல்படுவார்கள்?
வடமாகாண சபையின் இன்றைய அமர்வில் மீன்பிடி மற்றும் போக்குவரத்து அமைச்சர் அன்ரனி ஜெகநாதன் அண்மையில் சுமந்திரனின் கொடும்பாவி எரியூட்டப்பட்டமை தொடர்பில் விவாதமொன்றை ஆரம்பித்திருந்தார். கூட்டமைப்பில் உள்ளவர்களுள் மண்டைவளம் மிக்கவர் சுமந்திரன் மட்டுமே, அவரின் கொடும்பாவியை ஏன் எரித்தீர்கள்? ஆமி பிடித்து காணாமல் போனதற்குச் சுமந்திரனின் கொடும்பாவியை எரிப்பதானால் புலிகளால் பிடித்துச் சென்றவர்களிற்கு யாருடைய கொடும்பாவியை எரிப்பீர்கள் என்று அன்ரனி ஜெகநாதன் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
{.நா விசாரணை அறிக்கை பிற்போடப்பட்டதைத் தொடர்ந்து சிறீலங்காவின் உள்ளக விசாரணைக்கு சுமந்திரன் ஆதரவு தெரிவித்தமையினால் அண்மையில் காணாமல் போனோரின் உறவினர்கள் நடத்திய போராட்டதில் சுமந்திரனைக் கண்டித்து அவரின் கொடும்பாவியை எரியூட்டினர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
பிரித்தானிய பிரதமர் வடக்கிற்குச் சென்ற போது அங்கே அஹிம்சைப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் டேவிட் கமரூனை அழைத்துக் கொண்டு செல்லாமல் அவரை தடுத்தார் என்று சுமந்திரன் மீது அந்த மக்கள் குற்றம்சாட்டி வந்தார்கள். சுமந்திரனின் இச்செயலுக்காக அந்த மக்களிடம் மாவை அவர்கள் மன்னிப்புக் கோரியிருந்தார்.
சிறிலங்கா இராணுவத்தின் மீது போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட்டால் விடுதலைப் புலிகள் மீதும் போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும். இரு தரப்பும் போர்க் குற்றங்களை புரிந்தனர். எனவே போர்க்குற்ற விசாரணை வேண்டும் என கோருவதில் அர்த்தம் இல்லை என முன்னர் கூறியவரே சுமந்திரன். புலிகளைப் போர்க் குற்றவாளிகள் என்று கூறிவருகிறார் சுமந்திரன். தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். சிங்களப் போர்க் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் சுமந்திரன் ஈடுபாட்டடன் செயல்படவில்லை என்பதே நிரூபணமாகி வருகின்றது.
ஆனந்த சங்கரி, அன்ரனி ஜெகநாதன் இன்னும் சிலரும் கூட்டமைப்பில் இணைக்கப்பட்டு தேர்தலில் போட்டியிடுவதற்கு இடமளித்தவர் சுமந்திரன். கொடுக்கல் வாங்கலினால் பலர் கூட்டமைப்பில் இணைக்கப்பட்டு தேர்தலில் போட்டியிட்டார்கள். இந்த வியாபாரத்தை மேற்கொண்டவர் சுமந்திரன். பணம் கொடுத்து கூட்டமைப்பிற்குள் பிரவேசித்தவரே இந்த அன்ரனி ஜெகநாதன்.
வடமாகாண சபையில் {.நா விசாரணை அறிக்கை பிற்போடப்பட்டது தொடர்பாக அன்ரனி ஜெகநாதன் தற்போது கேள்விகளை எழுப்பவில்லை. நடைபெறும் தமிழ் மக்களின் போராட்டங்கள் தொடர்பாகவும் இவர் தற்போது கேள்விகளை எழுப்பவில்லை.
காணாமல் போனோரின் உறவினரின் போராட்டங்கள் தொடர்பாகவும் இவர் கேள்விகளை எழுப்பவில்லை. தமிழ் மக்களின் தற்போதைய நிலை தொடர்பாகவும் இவர் கேள்விகளை எழுப்பவில்லை.
ஆனால் இவர் சுமந்திரன் மீதுள்ள விசுவாசத்தை மட்டும் தற்போது வெளிப்படுத்தியிருக்கிறார். தமிழ் மக்களுக்கு விசுவாசத்தை வெளிப்படுத்த வேண்டியவர்கள் பணம் கொடுத்து அரசியலுக்கு வந்தமையினால் தமது முதலாளிகளுக்கு மட்டுமே விசுவாசத்தை வெளிப்படுத்துகின்றனர்.
காணாமல் போனோரின் உறவினரை இழிவுபடுத்தி அவர்களின் போராட்டத்தையும் நியாமற்ற போராட்டமாக வெளிப்படுத்துவதற்கு முற்படுகிறார் அன்ரனி ஜெகநாதன்.
சுமந்திரனுக்கு மாமா வேலை பார்க்கிறார் அன்ரனி ஜெகநாதன். அண்மையில் சுமந்திரனும், சம்பந்தனும் சிங்கள சுதந்திர தினத்தைக் கொண்டாடினார்கள் இதனைப் பற்றி வாய்திறக்க முடியாத அடிவருடிகள் இன்று சுமந்திரனின் கொடும்பாவி எரிக்கப்பட்டது தொடர்பாக கேள்விகளை எழுப்புகிறாரகள்.
தமிழ் மக்களால் தெரிவு செய்யப்படாத ஒருவனைப் பற்றி வடமாகாண சபையில் கேள்விகளை எழுப்புகிறார்கள் அடிவருடிகள். தனி நபர்களின் வழிபாட்டுத் தலமாக வடமாகாணசபை உள்ளதா? இது தொடர்பாக முதலில் அன்ரனி ஜெகநாதன் மீது வட மாகாணசபையில் விதிமீறல் நடவடிக்கையை எடுக்கவேண்டும்.
வடமாகாணசபை என்பது சிலர் போடும் எச்சில் எழும்புத் துண்டிற்காக அவர்களுக்கு ஆதரவாகக் குரைக்கும் இடமாக இருந்துவிடகக் கூடாது. தமிழ் மக்களின் நலனுக்காகச் செயல்படவேண்டிய வடமாகாணசபை இன்று அலங்கோலமாக மாற்றுவதற்குச் சில அடிவருடிகள் முயல்கிறார்கள்.
வட மாகாணசபையில் தமிழினத்தை அழித்த சிங்கள இராணுவம் போரில் இறந்தமைக்கு அஞ்சலி செலுத்தியவரே இந்த அன்ரனி ஜெகநாதன். சிறீலங்காவின் சிங்கக் கொடியை ஏற்றி மகிழ்ந்தவரும் இவரே. புலிகளால் பிடித்துச் சென்றவர்களுக்கு என்ன பதில் கூறப்போகிறீர்கள் என்று காணாமல் போனோரின் போராட்டக் குழுவினரை நோக்கி வினாவினை எழுப்புகிறார் இந்த அன்ரனி ஜெகநாதன்.
சிங்களப் படையினரால் பிடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது பல்லாயிரமாகும். இறுதியில் புலிகளையும், தமிழ் மக்களையும் பிடித்துச் சென்றவர்கள் இராணுவமே. இந்த உண்மையை மறைக்க முற்படுகிறார் அன்ரனி ஜெகநாதன்.
தமிழ் மக்களிடம் வாக்குகளைப் பெற்று சிங்களப் பேரினவாதிகளைப் போன்று திமிருடன் தமிழர்களிடம் கேள்விகளை எழுப்புகிறார் அன்ரனி ஜெகநாதன். இவர் தான் கூறியவற்றை தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழ் மக்கள் முன் கூறி அவர்களிடம் வாக்குகளைக் கோரியிருக்கலாமே?
இவரை ஈன்றவள் உண்மையில் சிங்களவனுக்கு இவரைப் பெறவில்லை என்பது உண்மையானால் வரும் தேர்தலில் புலிகள் தமிழ் மக்களைப் பிடித்துச் சென்றார்களே அவர்களுக்கு நீங்கள் என்ன பதில் கூறப்போகிறீர்கள் என்று கூறி தமிழ் மக்களிடம் வாக்குகளை கோருவதற்கு முதுகெலுப்பு உள்ளதா அன்ரனி ஜெகநாதனுக்கு?
தமிழினம் அழிக்கப்பட்டமை தொடர்பில் சிறிதும் கவலையில்லை. தமிழினச் சுத்திகரிப்பு நடவடிக்கை தொடர்ந்து நடைபெறுகிறதே என்றும் கவலையில்லை. ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் காணாமல் சென்றுவிட்டார்களே என்பதிலும் சிறிதும் அக்கறையில்லை.
பாதிக்கப்பட்டு அவலநிலையில் உள்ள மக்களைப் பற்றியும் சிறிதும் கவலையில்லாமல் செயல்படும் இந்த பாதகர்களை என்ன சொல்வது? அழித்த சிங்களவனை விடக் கொடியோர்கள் என்றே கூறவேண்டியுள்ளது.
பணத்தைக் கொடுத்து அரசிலுக்கு வந்தவர்கள் எவ்வாறு செயல்படுவார்கள் என்பதற்கு மிகச்சிறந்த முன்னூதாரணமாகத் திகழ்கிறார் அன்ரனி ஜெகநாதன். பணத்தைக் கொடுத்து அரசியலுக்கு வந்தவர்கள் எவ்வாறு தமிழ் மக்களுக்காக விசுவாசிகளாகச் செயல்படப் போகிறார்கள்?
–ஈழமகன்-.-
Average Rating