ஓமலூர் அருகே புதையலுக்காக பெண் கொலை: த.மா.கா. பிரமுகர் உள்பட 2 பேரிடம் போலீசார் விசாரணை!!

Read Time:4 Minute, 20 Second

0c0cc435-da66-4fd2-b481-a8798013ef88_S_secvpfஓமலூரை அடுத்த பச்சனம்பட்டியை சேர்ந்தவர் பழனியம்மாள் (55). இவரது கணவர் இறந்து விட்டார். இவர்களுக்கு ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர். மகளை திருமணம் செய்து கொடுத்து விட்டனர். 2 மகன்களும் ஓமலூர் அருகே உள்ள பொட்டியாபுரத்தில் உள்ள பழனியம்மாளின் தம்பி வீட்டில் வசித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தனியாக வசித்து வந்த பழனியம்மாள், தனது வீட்டில் புதையல் இருப்பதாக கூறி பலரிடம் பணம் கடனாக பெற்றதாக கூறப்படுகிறது. கடந்த 4 மாதங்களாக பழனியம்மாள் த.மா.கா. பிரமுகர் சின்னையன் என்பவர் வீட்டில் குடியிருந்து வந்தார்.

பழனியம்மாளை நேற்று முன்தினம் அவரது மகள் சரண்யா வந்து சந்தித்து சென்றார். நேற்று காலையில் பழனியம்மாளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு சேலம் அரசு அஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு இறந்து விட்டதாக உறவினர் காளி என்பவர் மூலம் மகள் சரண்யாவுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து பழனியம்மாளின் உடலை ஆம்புலன்சில் காளி பச்சனம்பட்டிக்கு கொண்டு வந்தார். ஆனால் பழனியம்மாள் உடலை அடக்கம் செய்ய ஊர் பொதுமக்கள் யாரும் முன்வரவில்லை. அப்போது ஆம்புலன்சில் இருந்த காளியும் இறங்கிசென்று விட்டார்.

பின்னர் காலை 11 மணிக்கு ஆம்புலன்சு டிரைவர் ஓமலூர் போலீஸ் நிலையத்துக்கு பழனியம்மாளின் பிணத்துடன் சென்றார். போலீசார் சரண்யாவுக்கு தகவல் தெரிவித்தனர். அப்போது அங்குவந்த அவரும் உறவினர்களும் பிணத்தை வாங்க மறுப்பு தெரிவித்தனர். மேலும் பழனியம்மாள் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், சின்னையன் வீட்டில் இருந்த போது புதையல் இருப்பதாக கூறி என் தாயாரை அடித்து கொலை செய்து இருக்கலாம் என்று புகார் செய்தார்.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பழனியம்மாளின் உடலை சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து பழனியம்மாள் வீட்டிற்கு சென்று போலீசார் பார்த்த போது அங்கு 3 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டப்பட்டு புதையல் தேடப்பட்டதற்கான அடையாளம் உள்ளதை கண்டுபிடித்தனர்.

பழனியம்மாள் புதையல் இருப்பதாக கூறி பலரிடம் பணம் வாங்கிய தகராறில் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். பிரேத பரிசோதனைக்கு பின்னர் பழனியம்மாள் உடலுடன் மீண்டும் இரவில் சாலை மறியல் செய்தனர்.

அப்போது த.மா.கா.பிரமுகர் சின்னையன் மற்றும் காளி உள்ளிட்ட சிலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு சுப்புலட்சுமி மற்றும் டி.எஸ்.பி. உதயகுமார் உள்ளிட்ட போலீசார் அங்கு விரைந்து சென்று பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்ததும் குற்றவாளிகள் மீது நிச்சயமாக நடவடிக்கை எடுக்கிறோம் என்று தெரிவித்தனர்.

இதையடுத்து இரவு 11 மணிக்கு மேல் பழனியம்மாள் உடல் அடக்கம் செய்யப்பட்டது. போலீசார் த.மா.கா. பிரமுகர் சின்னையன், காளி ஆகிய 2 பேரை பிடித்து விடிய விடிய விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எட்டயபுரம் அருகே பள்ளி மாணவியின் திருமணம் தடுத்து நிறுத்தம்: தாசில்தார் அதிரடி நடவடிக்கை!!
Next post திருப்பூரில் ரோந்து சென்ற போலீஸ் ஏட்டுவை கல்லால் தாக்கிய போதை வாலிபர்கள்!!