பீகார்: நிலத்தகராறில் 2 பெண்கள் உட்பட 4 பேர் மீது ஆசிட் வீச்சு!!

Read Time:1 Minute, 18 Second

bc26ff72-0e4c-4ef9-81be-8b88b4b12f3b_S_secvpfபீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தில் உள்ள லோக்னாத்பூர் கிராமத்தில் இன்று நிலத்தை பங்கிடுவது தொடர்பாக இரண்டு குழுவினரிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில் குழுக்களுக்கிடையே வாக்குவாதம் முற்றியது. அப்போது திடீரென ஒரு குழுவினர் தாங்கள் மறைத்து வைத்திருந்த ஆசிட் பாட்டிலை எடுத்து தாக்குதல் நடத்தினர்.

இதில் மற்றொரு குழுவை சேர்ந்த 2 பெண்கள் உட்பட 4 பேர் காயமடைந்தனர். சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஒடிசா: ஆபரேஷன் தியேட்டரில் பிரசவித்த பெண்ணுக்கு துப்புரவு தொழிலாளி தையல் போட்ட கொடூரம்!!
Next post மாணவிகளின் மடியில் உடகார்ந்த மாணவனின் படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்ட 6 மாணவர்கள் சஸ்பெண்ட்!!