தேனி அருகே கால்நடை உதவி இயக்குனர் வீட்டில் 20 பவுன் நகை கொள்ளை!!

Read Time:1 Minute, 41 Second

1f8ff1cc-160c-43cb-a2ae-4346fb98e072_S_secvpfதேனி அருகே போடி திருமலாபுரம் முதல் தெருவை சேர்ந்தவர் முருகேசன். பெரியகுளம் கோட்ட கால்நடைத்துறை உதவி இயக்குனராக உள்ளார். இவர் தனது குடும்பத்துடன் திருப்பூரில் நடந்த உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றார்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மர்ம நபர்கள் வீட்டின் ஜன்னல் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவை திறந்து அதில் உள்ள நகை–பணம் மற்றும் இதர பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.

இந்த தகவலை அக்கம் பக்கம் உள்ளவர்கள் வெளியூர் சென்றிருந்த முருகேசனுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் உடனடியாக வீட்டுக்கு விரைந்தார். அப்போது 20 பவுன் நகை, ரொக்க பணம் ரூ. 25 ஆயிரம் மற்றும் வெள்ளிப்பொருட்கள் கொள்ளைபோனது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து முருகேசன் போடி டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

கொள்ளையர்கள் பற்றி துப்பு துலக்க மோப்பநாய் வரவழைக்கப்பட்டு போலீசார் சோதனை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்து உள்ளனர். இதன் மூலம் போலீசார் துப்பு துலக்கி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வங்கியில் உதவி செய்வது போல் நடித்து விவசாயிடம் திருட்டு: கண்காணிப்பு கேமிரா மூலம் துப்பு துலங்கியது!!
Next post ஜோலார்பேட்டையில் ரெயில் முன் பாய்ந்து சென்னை என்ஜினீயர் தற்கொலை!!