தாய்–மனைவி–அண்ணனை கொன்று விவசாயி தற்கொலை செய்தது ஏன்?: போலீசார் விசாரணை தகவல்கள்!!
நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரத்தை அடுத்த ஓலப்பாளையம் மோளக்காடு பகுதியை சேர்ந்த செட்டியம்மாள் (வயது 75), அவரது மகன் காளியண்ணன் (55) மற்றும் இன்னொரு மகன் பழனிவேலுவின் மனைவி மணி என்ற கிருஷ்ணவேணி (30) ஆகியோர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தனர். பழனிவேலு வீட்டின் ஒரு அறையில் தூக்கில் பிணமாக தொங்கினார்.
இது குறித்து புதுச்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வளவன் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி 4 பேரின் பிணங்களையும் மீட்டு சேலம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் குடும்பத் தகராறில் பழனி வேலு தனது தாயார், மனைவி மற்றும் தனது அண்ணன் ஆகியோரை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்தது தெரிய வந்தது. கொலைக்கு பயன்படுத்தப்பட்ட அரிவாள் மனை சோளத்தட்டை போரில் இருந்து தீயணைப்பு படை வீரர்கள் கைப்பற்றினார்கள்.
பழனிவேலுவுக்கு குடிப்பழக்கம் உண்டு. இதனால் அவர் குடித்து விட்டு வந்து அடிக்கடி தகராறு செய்து வந்தார். இதனால் அவரது முதல் மனைவி செல்லம், தனது மகனுடன் கடந்த 8 ஆண்டுக்கு முன்பு கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் கரூரைச் சேர்ந்த மணி என்ற கிருஷ்ண வேணியை (30) கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். மனைவியின் நடத்தையில் பழனிவேலு சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்தார். அடிக்கடி குடித்து விட்டு வந்து தனது மனைவி மற்றும் தாயாரிடம் தகராறு செய்து வந்து உள்ளார்.
இதனால் அவரது மனைவி கிருஷ்ணவேணி கோபித்து கொண்டு கரூருக்கு சென்று விடுவார். பின்னர் பழனிவேலு கரூர் சென்று மனைவியை சமாதானம் செய்து அழைத்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு பழனிவேலு தகராறு செய்தார்.
அப்போது அவரது பெரியப்பா மகனான காளியண்ணன் (61) இவர்களது வீட்டுக்கு வந்து பழனிவேலுவை சத்தம் போட்டு இனிமேல் தகராறு செய்யக்கூடாது என்று சமாதானம் செய்தார். ஆனாலும் பழனிவேலு மனதில் வெறி அடங்கவில்லை. நேற்று முன்தினம் மாலையில் குடித்து விட்டு வந்தார்.
அப்போது அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அவர் தனது மனைவியை அரிவாள் மனையால் கொலை செய்து விட்டு ஒரு அறையில் வைத்து பூட்டினார். பின்னர் தனது அண்ணன் காளியண்ணனை அதே அரிவாள் மனையால் வெட்டி கொன்றார்.
பின்னர் தாயார் கழுத்தை நெரித்து கொன்று விட்டு அரிவாள் மனையை கழுவி சோளத்தட்டை போரில் வைத்து விட்டு சட்டையை மாற்றினார். அதன் பிறகு கையால் ஒரு பேப்பரில் எழுதி வைத்து கதவில் ஒட்டினார். அதன் பிறகு தன் பெயரில் உள்ள ஆறரை ஏக்கர் நிலம் மற்றும் தாயார் பெயரில் உள்ள 3 ஏக்கர் நிலம் ஆகியவற்றை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று எழுதி தனது பனியனுக்குள் போட்டு விட்டார்.
பின்னர் சொத்து பத்திரங்களையும் எடுத்து தனது பனியனில் போட்டுக் கொண்டு உடலில் போர்வையால் மூடிக் கொண்டு ஏணி மூலம் வீட்டு மேல் ஏறினார். அதன் பிறகு விட்டத்தில் கயிற்றால் தூக்கில் தொங்கினார். மேற்கண்ட விவரங்கள் அனைத்தும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது.
அவர் தற்கொலை செய்வதற்கு முன்பு 10, 20, 50, 100, 500 ரூபாய் நோட்டுக்களை கிழித்து அறையிலும், விவசாய நிலத்திலும் வீசி உள்ளார்.
கொலைகள் நடந்த இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்திய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் நிருபரிடம் கூறியதாவது:–
விவசாயி பழனிவேலு தனது தாயார், அண்ணன் மற்றும் மனைவி ஆகியோரை கொன்று விட்டு தற்கொலை செய்தது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. குடும்பத் தகராறில் இந்தக் கொலைகள் நடந்து உள்ளன .சொத்து தகராறில் கொலைகள் நடந்ததாக தெரியவில்லை.
மேலும் பழனிவேலு கதவில் எழுதி ஒட்டிய கடிதத்தில் இருந்த கையெழுத்தும், 10 ஏக்கர் நிலங்களையும், வீட்டையும் உறவினர்களுக்கு கொடுக்க வேண்டாம் என்றும், அரசு எடுத்துக் கொண்டு அந்த இடத்தில் அனாதை இல்லங்கள், முதியோர் இல்லம் கட்டவும் பயன்படுத்த வேண்டும் என்றும் எழுதி இருந்த கடிதத்தில் இருந்த கையெழுத்தும் பழனிவேலுவின் கையெழுத்து என்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Average Rating