குலசேகரம் அருகே காதல் தகராறில் அண்ணன்–தம்பிக்கு அரிவாள் வெட்டு: தந்தை–மகன் கைது!!

Read Time:3 Minute, 0 Second

45cfe4eb-b956-472a-b720-a1974e7333ab_S_secvpfகுலசேகரத்தை அடுத்த கூடைதூக்கி பகுதியை சேர்ந்தவர் தனுஷ்லால். இவரது மகன்கள் செல்வம், ஜார்ஜ், ஸ்டாலின் ஜோஸ்.

இவர்களில் செல்வம் திருமணமாகி மங்கலம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகன் அதேபகுதியில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வருகிறார். இவரை பார்க்க அடிக்கடி அவரது நண்பர் ஒருவர் வருவார். அவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பெண்ணை காதலித்தார்.

இந்த காதலுக்கு செல்வத்தின் மகன் உதவி செய்தார். இது பெண்ணின் பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் தெரிய வந்தது. அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு மங்கலம் பகுதிக்கு வந்தனர். அங்கு செல்வத்தின் மகனை தேடிப்பிடித்து தாக்கினர். மேலும், செல்வத்தின் மகனின் நண்பரையும் அடித்து உதைத்தனர்.

இந்த தகவல் செல்வத்துக்கு தெரிய வந்தது. அவர் உடனே இதுபற்றி தனது சகோதரர்கள் ஜார்ஜ், ஸ்டாலின்ஜோஸ் ஆகியோரிடம் தெரிவித்தார். அவர்கள் நேற்று மாலை மங்கலம் பகுதிக்கு சென்றனர். அங்கு தனது அண்ணன் மகனை தாக்கியவர்கள் யார்? எனக்கேட்டு தகராறில் ஈடுபட்டனர்.

இதனை பெண்ணின் உறவினர்களும், அதே பகுதியை சேர்ந்த முத்துசாமி, அவரது மகன் சுஜின் ஆகியோர் தட்டிக்கேட்டனர். இதில் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு மூண்டது. ஆத்திரமடைந்த முத்துசாமி, சுஜின் இருவரும் அரிவாளால் ஜார்ஜ், ஸ்டாலின் ஜோஸ் மற்றும் அவர்களுடன் சென்ற ஜஸ்டின் ஆகியோரை சரமாரியாக வெட்டினர்.

ஜார்ஜ், ஸ்டாலின்ஜோஸ் இருவருக்கும் கை மணிக்கட்டில் வெட்டு விழுந்தது. இதில் கை துண்டானது. ஜஸ்டினுக்கு தலையில் வெட்டுப்பட்டு மயங்கி விழுந்தார். படுகாயமடைந்தவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் இதுபற்றி குலசேகரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கிருந்து போலீசார் விரைந்து வந்து முத்துசாமி, அவரது மகன் சுஜின் ஆகியோரை கைது செய்தனர்.

படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 4 மாத குழந்தையுடன் தாய் தீக்குளித்து தற்கொலை!!
Next post நெல்லை அருகே அதிமுக பிரமுகர் மகளை காதலித்த கார் டிரைவருக்கு அரிவாள் வெட்டு!!