4 மாத குழந்தையுடன் தாய் தீக்குளித்து தற்கொலை!!

Read Time:1 Minute, 36 Second

eea736d0-1e15-4b25-bbfb-9b2fe555631d_S_secvpfஉத்தரப்பிரதேசம் மாநிலத்தில் 4 மாத கைக்குழந்தையுடன் தாய் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலம், அலிகார் மாவட்டம், கங்கை சாண்டோஸ் கிராமத்தை சேர்ந்தவர், சோனம்(30). முதல் கணவரிடம் இருந்து இரண்டாண்டுகளுக்கு முன்னர் விவாகரத்து பெற்ற இவருக்கு பெற்றோர் மீண்டும் திருமணம் செய்து வைத்தனர். இரண்டவது கணவருடனான இல்லற வாழ்க்கையில் ஒரு குழந்தையை பெற்றெடுத்த பின்னரும் முதல் கணவரை மறக்க முடியாத சோனம், அடிக்கடி சோகமாகவே இருந்து வந்தார்.

சோனத்தின் மனநிலையை மாற்ற அவரது பெற்றோர் ஆக்ராவில் உள்ள ஒரு டாக்டரிடம் அவருக்கு சிகிச்சை அளித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த சனிக்கிழமை மடியில் கிடந்த தனது 4 மாத குழந்தையுடன் சோனம் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

இது தொடர்பான புகார்கள் ஏதும் வரப்பெறாத நிலையில், இச்சம்பவம் பற்றி விசாரித்து வருவதாக மாவட்ட போலீஸ் துணை சூப்பிரண்ட் இன்று தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிங்கத்தோடு உணவு – கரடியின் முன் குளியல்: ஆஸ்திரேலியாவில் புதிய ஓட்டல் திறப்பு!!
Next post குலசேகரம் அருகே காதல் தகராறில் அண்ணன்–தம்பிக்கு அரிவாள் வெட்டு: தந்தை–மகன் கைது!!