இ-சிகரெட்டால் கனவாய் போன குழந்தை ஆசை: தத்து கொடுக்க மறுத்த சமூக சேவை மையம்!!
இங்கிலாந்தை சேர்ந்த அபிகெயில்(43), பிரெயின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தம்பதியினருக்கு திருமணமாகி நீண்ட நாட்கள் ஆகியும் குழந்தை இல்லை. இதனால் செயற்கை கருத்தரிப்பு முறையான ஐ.வி.எப். முறையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த சிகிச்சைகளுக்காக 20000 யூரோ வரை (19 லட்ச ரூபாய்) செலவு செய்தும் பலனில்லாத நிலையில், நிறைய குழந்தைகள் நல்ல குடும்பம் கிடைக்காமல் அனாதை விடுதிகளில் இருக்கும் போது நாம் ஏன் அவர்களை தத்தெடுக்கக்கூடாது என்று முடிவு செய்தனர்.
இதனால், 2013-ம் ஆண்டு இறுதியில் ஸ்டாஃபோர்டுஷைர் கவுண்டியில் உள்ள ஒரு சமூக சேவை மன்றத்தை அணுகி குழந்தையை தத்தெடுப்பதற்காக விண்ணப்பித்தனர். இங்கிலாந்தில் தத்தெடுப்பதற்கான கெடுபிடிகள் அதிகம் என்பதால் அவர்களுக்கு நேர்முகத்தேர்வு உட்பட பல சோதனைகள் செய்யப்பட்டது. இது அவர்களின் பொறுமையை சோதித்தது. இறுதியாக செப்டம்பர் மாதம் குழந்தையை வளர்ப்பதற்கான பொருளாதார தகுதி இருக்கிறது என்று அதிகாரிகள் முடிவு செய்த நிலையில் விரைவில் தங்களுக்கு குழந்தை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தனர்.
அபிகெயில் சிகரெட் பிடிப்பது அதிகாரிக்கு தெரிய வந்ததும் நிலைமை தலைகீழாக மாறியது. இத்தனைக்கும் அந்த காலகட்டத்தில் சிகரெட் பழக்கத்தை விடுவதற்காக அவர் இ-சிகரெட் தான் பிடித்துக்கொண்டிருந்தார். ஆனால் அக்டோபர் மாதம் அவருக்கு இ-மெயில் அனுப்பிய சமூகசேவை மையம் இ-சிகரெட் புகைப்பதால் உங்களுக்கு குழந்தையை தத்துக்கொடுக்க முடியாதென்றும் 12 மாதம் நீங்கள் சிகரெட் புகைக்காமல் இருந்தால் உங்களுக்கு குழந்தையை கொடுப்பது பற்றி யோசிக்க முடியும் என்று தெரிவித்தது.
இது மிகவும் மோசமானது என்று குற்றம் சாட்டும் அபிகெயிலும் அவரது மனைவியும் இதனால் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். மருத்துவர்கள் இ-சிகரெட்டிலிருந்து வரும் புகையால் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு பாதிப்பில்லை என்று தெரிவித்திருந்தும், இங்கிலாந்து சுகாதாரத்துறையே இ-சிகரெட் பிடிப்பது மிகவும் குறைவான பாதிப்பையே ஏற்படுத்தும் என்று தெரிவித்த நிலையில் இந்த சம்பவம் பலரை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating