என்னை களங்கபடுத்த சதி: லட்சுமி மேனன் ஆவேசம்!!

Read Time:2 Minute, 13 Second

5a7afe6d-696b-4214-be30-c469e6c248f7_S_secvpfலட்சுமி மேனன் பெயரில் ஆபாச வீடியோ படங்கள் இணைய தளங்களிலும் வாட்ஸ் அப்களிலும் சமீபத்தில் பரவியது. இதனால் பட உலகில் பரபரப்பு ஏற்பட்டது. வீடியோவில் இருப்பது லட்சுமிமேனன் தானா அல்லது மார்பிங், செய்யப்பட்ட போலி படமா என்று விவாதங்கள் நடந்தன.

இந்த படங்கள் குறித்து லட்சுமிமேனன் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:–

ஆபாச வீடியோ படத்தில் இருப்பது நான் அல்ல. யாரோ என்னை களப்படுத்துவதற்காக திட்டமிட்டு இந்த படத்தை வெளியிட்டு இருப்பது தெரிகிறது.

கடந்த சில வருடங்களாகவே சினிமாவில் நான் நடித்துக் கொண்டு இருக்கிறேன். இதுவரை என்னை பற்றி எந்தவொரு தவறான செய்தியும் வர வில்லை.

ஆனால் இப்போது திட்டமிட்டு இந்த அபாச படத்தை வெளியிட்டு உள்ளனர். அந்த ஆபாச வீடியோவில் இருக்கும் பெண்ணின் முகத்துக்கும் என் முகத்துக்கும் சம்மந்தமே இல்லை. அந்த வீடியோ உண்மையானது இல்லை என்பது எல்லோருக்கும் தெரியும்.

நான் இப்போது பிளஸ்டூ தேர்வுக்காக படித்துக் கொண்டு இருக்கிறேன். என்னை படிக்கவிடாமல் செய்யவும், கவனத்தை திசை திருப்பவும் இந்த சதி செயல் செய்யப்பட்டு இருக்கலாம் என நினைக்கிறேன். அதை நான் பொருட்படுத்தவில்லை. ஆனாலும் பரீச்சை முடிந்ததும் இந்த சதிக்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதை கண்டு பிடிக்கும் முயற்சியில் இறங்குவேன்.

நடிகையாகி விட்டால் இது போன்ற சங்கடங்களை சந்தித்து தான் ஆக வேண்டும்.

இவ்வாறு லட்சுமிமேனன் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உலக முடிவில் மரத்தில் தொங்கியபடி உயிருக்கு போராடிய வௌிநாட்டவர் மீட்பு!!
Next post குத்தாட்டத்துக்கு மாறிய ஒல்லி நடிகை!!