ரீ-ஷூட்டிற்குப் பிறகு யு சான்றிதழ் வாங்கிய வஜ்ரம்!!

Read Time:2 Minute, 9 Second

11bbb20f-91f7-4701-8f46-26b5714aa6ef_S_secvpfபசங்க, கோலிசோடா ஆகிய வெற்றிப்படங்களில் நடித்த ஸ்ரீராம், கிஷோர், பாண்டி, குட்டி மணி ஆகிய நால்வரும் தற்போது நடித்து வரும் படம் ‘வஜ்ரம்’. இப்படத்தில் கதாநாயகியாக பவானிரெட்டி என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். மற்றும் ஜெயபிரகாஷ், தம்பி ராமையா, மயில்சாமி, மூணார் ரமேஷ், நந்தா சரவணன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

பைசல் இசையமைக்கும் இப்படத்திற்கு குமரேசன் ஒளிப்பதிவு செய்கிறார். கதை, திரைக்கதை அமைத்து எஸ்.டி.ரமேஷ் செல்வன் இயக்கியிருக்கிறார். ஸ்ரீ சாய்ராம் பிலிம் பேக்டரி பட நிறுவனம் சார்பாக பி.ராமு தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து கடந்த மாதமே தணிக்கை குழுவிற்கு அனுப்பப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை குழுவினர், படத்தில் வன்முறை காட்சிகள் அதிகம் இருப்பதாக கூறி யுஏ சான்றிதழ் தான் தர முடியும் என்று கூறினர். இதனை ஏற்காத படக்குழுவினர், படத்திற்கு யு சான்றிதழ் பெற வேண்டும் என்ற நோக்கில் படத்தில் சில காட்சிகளை நீக்கி விட்டு, அதற்கு பதிலாக ரீ ஷூட்டிங் நடத்தப் பட்டு புதிய காட்சிகளை இணைத்து மீண்டும் தணிக்கை குழுவிற்கு அனுப்பினர். மீண்டும் படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு யு சான்றிதழ் வழங்கியுள்ளது.

யு சான்றிதழ் கிடைத்த மகிழ்ச்சியில் இருக்கும் படக்குழுவினர் படத்தை இம்மாதம் 27ம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குத்தாட்டத்துக்கு மாறிய ஒல்லி நடிகை!!
Next post லக்னோவில் வேகமாக பரவுகிறது பன்றிக்காய்ச்சல்: 24 மணி நேரத்தில் 24 புதிய நோயாளிகள் கண்டுபிடிப்பு!!