சமந்தாவை காண திரண்ட ரசிகர்கள்: போலீஸ் தடியடி!!

Read Time:1 Minute, 13 Second

1a5c33da-11ee-418e-8252-af61e2362550_S_secvpfசமந்தா தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார். ஆந்திராவில் அவருக்கு அதிகமான ரசிகர்கள் பட்டாளமும் இருக்கிறது. ஐதராபாத்தில் நகைக்கடை திறப்பு, ஜவுளிக்கடை திறப்பு நிகழ்ச்சிகளுக்கும் சமந்தாவையே அழைக்கிறார்கள்.

ஐதராபாத்தில் புதிதாக கட்டப்பட்ட வணிகவளாகம் திறப்பு நிகழ்ச்சிக்கு சமந்தா அழைக்கப்பட்டு இருந்தார். அவரைக்காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு நின்றனர். சமந்தா காரில் வந்து இறங்கியதும் அவரை காண முண்டியடித்தனர்.

சமந்தா கையை பிடித்து இழுக்கவும் முயற்சித்தனர். இதையடுத்து போலீசார் லேசான தடியடி நடத்தி ரசிகர்களை அப்புறப்படுத்தி விட்டு சமந்தாவை வணிக வளாகத்துக்குள் அழைத்து சென்றனர். நிகழ்ச்சி முடிந்த பிறகு கைகளை கோர்த்து பாதுகாப்பாக காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உதயநிதி-எமி ஜாக்சன் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் கொச்சியில் நாளை ஆரம்பம்!!
Next post மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி நசீட் கைது!!