பெங்களூர் அழகிகளை விபசாரத்தில் தள்ளிய துணை நடிகை, கணவருடன் போலீசில் சிக்கினார்!!

Read Time:1 Minute, 42 Second

23e4b7dd-c5bd-403a-9a4f-67b6874756a0_S_secvpfசென்னையை அடுத்த நீலங்கரை ஈஞ்சம்பாக்கத்தில் வெளி மாநில அழகிகளை வைத்து விபசாரம் செய்வதாக அடையாறு துணை போலீஸ் கமிஷனர் கண்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து உதவி கமிஷனர் சங்கர், இன்ஸ்பெக்டர் ஜெய்கிருஷ்ணன், சப்–இன்ஸ்பெக்டர் சண்முகம் ஆகியோர் கொண்ட போலீஸ் படை இன்று காலை செல்வம் நகரில் உள்ள வீட்டிற்கு சென்றது.

மாடியில் உள்ள பகுதிக்கு சென்று போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வீட்டில் 2 பெண்கள் இருந்தனர். அவர்கள் இருவரும் பெங்களூரைச் சேர்ந்தவர்கள். சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசை காட்டி சென்னைக்கு அழைத்து வந்து விபசாரத்தில் ஈடுபட வைத்தது தெரிய வந்தது.

இளம் அழகிகளை விபசாரத்தில் பயன்படுத்திய பாலு அவரது மனைவி ராதா ஆகிய இருவரையும் போலீசார் பிடித்து விசாரித்ததில் ராதா டி.வி.யில் துணை நடிகையாக நடித்து இருப்பது தெரிந்தது.

வாடகைக்கு வீடு எடுத்து இளம் பெண்களை விபசாரத்தில் தள்ளிய இருவரிடமும் விபசார தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மீட்கப்பட்ட 2 பெண்களும் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சங்கரன்கோவில் அருகே புதுமாப்பிள்ளை கொலையில் கைதான வாலிபரிடம் விசாரணை!!
Next post பள்ளிக்கு செல்லாததை தந்தை கண்டித்ததால் மகள் தற்கொலை!!