டெல்லியில் தொடரும் பாலியல் வன்முறை: ஓடும் காரில் நைஜீரிய சுற்றுலா பயணி கற்பழிப்பு- 4 பேர் கைது!!

Read Time:2 Minute, 17 Second

d7cdfd10-e6b4-4f19-ae65-d977e7b3bf30_S_secvpfடெல்லியில் ஓடும் காருக்குள் வைத்து நைஜீரிய சுற்றுலா பயணியை கற்பழித்த 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

டெல்லியில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. 2012-ல் மருத்துவ மாணவி நிர்பயா கற்பழித்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கும் வகையில் சட்டம் இயற்றப்பட்டும் வாகனங்களில் வைத்து பெண்களை பலாத்காரம் செய்யும் கும்பல்களின் அட்டகாசம் நின்றபாடில்லை.

கடந்த ஆண்டு உபேர் கால் டாக்சி டிரைவரால் ஒரு பெண் ஊழியர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவமும் இன்னும் இதுபோன்ற பல சம்பவங்களும் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.

இந்நிலையில், தெற்கு டெல்லியில் 4 பேர் கொண்ட கும்பல், நைஜீரியாவிலிருந்து சுற்றுலா வந்த 35 வயதான பெண் பயணி ஒருவரை தங்கள் காரில் கடத்திச்சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் அந்த பெண்ணை கிழக்கு டெல்லியின் மயூர் விகாருக்கு அருகேயுள்ள டிஎன்டி டோல் பிளாசாவில் அதிகாலை 2.45 மணியளவில் தூக்கிப்போட்டு விட்டு சென்றுள்ளனர்.

சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து அந்த 4 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களின் காரையும் பறிமுதல் செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

டெல்லியில் கடந்த ஆண்டில் மட்டும் 2069 கற்பழிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆவணங்கள் திருட்டு அம்பலமானது எப்படி?: 10 ஆண்டுகளாக திருட்டு!!
Next post கேரளாவில் பெண்களிடம் நகை பறித்த போலி சப்–இன்ஸ்பெக்டர் கைது!!