ஆவணங்கள் திருட்டு அம்பலமானது எப்படி?: 10 ஆண்டுகளாக திருட்டு!!

Read Time:5 Minute, 18 Second

a41622c0-2a2a-4e2d-a2ec-0ec7d6909f3c_S_secvpfடெல்லியில் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களே தங்கள் இலாகாக்களில் எடுக்கப்படும் முக்கிய முடிவுகளையும், ரகசிய ஆலோசனை கூட்ட உரையாடல்களையும் இணைய தளங்கள் மற்றும் நாளிதழ்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளனர்.

இதில் ஒரு கும்பலே செயல்பட்டு வந்து இருப்பது தெரியவந்துள்ளது. ஆவணங்களை திருடி விற்பதன் மூலம் பெருமளவில் பணம் சம்பாதித்து வந்துள்ளனர். அரசு வழங்கும் சம்பளத்தைப் போல் ஆவணங்களை திருடி விற்பதிலும் பெரும் தொகை கிடைத்துள்ளது.

கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில் 10 ஆண்டுகளாக இந்த ஆவண திருட்டில் ஈடுபட்டு வந்ததாக தெரிவித்துள்ளனர். தற்போது மத்திய அரசு விழித்துக் கொண்டு இதை கண்டு பிடித்துள்ளது. ஆவணத் திருட்டு அம்பலமானது பற்றி புதிய தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்குக்கு துறை சம்பந்தப்பட்ட ரகசிய தகவல்கள் அடங்கிய கடிதம் ஒன்றை அனுப்பினார். இதைத் தொடர்ந்து பிரதமர் மோடி பட்ஜெட் தொடர்பாக நிதி மந்திரி அருண் ஜெட்லிக்கு ஒரு கடிதம் எழுதினார். இந்த இரு ரகசிய கடிதங்களும் உடனே இந்தியன் பெட்ரோ டாட் காம் என்ற இணைய தளத்தில் வெளியானது.

இது பிரதமர் அலுவலகத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. ரகசிய கடிதங்கள் இணைய தளத்தில் வெளியானது எப்படி? அப்படியானால் அரசு அலுவலக ஊழியர் யாரோ தான் இந்த கடிதங்களை திருடி கொடுத்து இருக்க வேண்டும் என்று கருதப்பட்டது.

இதையடுத்து பிரதமர் அலுவலகம் விசாரணைக்கு உத்தரவிட்டது. புலனாய்வு பிரிவு அதிகாரிகள் ரகசிய விசாரணையில் இறங்கினார்கள். அப்போது பெட்ரோலியத் துறையில் பணியாற்றும் ஊழியர் இதில் சம்பந்தப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை பொறி வைத்து பிடிக்க முடிவு செய்தனர்.

அந்த ஊழியரின் டெலிபோன் டேப் செய்யப்பட்டு உரையாடல்கள் கண்காணிக்கப்பட்டது. அப்போது அவர் அடிக்கடி ஒரு முக்கிய எண்ணுடன் தொடர்பு கொண்டு பேசுவது கண்டு பிடிக்கப்பட்டது. அந்த எண் யாருடையது என்று ரகசிய விசாரணையில் ஈடுபட்ட போது அது முன்னாள் பத்திரிகையாளர் சாந்தனு சைக்கியாவினுடையது என தெரிய வந்தது.

இதே போல் பெட்ரோலியத் துறையில் பணியாற்றும் சில ஊழியர்கள் ரிலையன்ஸ் நிறுவன ஊழியர்களுடன் அடிக்கடி பேசுவதும் கண்டு பிடிக்கப்பட்டது. இதுபோல் கார்ப்பரேட் நிறுவனங்களைச் சேர்ந்த 5 ஊழியர்கள், பெட்ரோலியத்துறை ஊழியர்களுடன் தொடர்பில் இருப்பதும் இவர்கள் மத்திய அரசின் முக்கிய ஆவணங்களை திருடி பரிமாறிக் கொள்வதும் ஆதாரத்துடன் கண்டு பிடிக்கப்பட்டது.

இவர்கள் டெலிபோனில் மட்டுமே ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வார்கள். இவர்களுக்கு இடையே இடைத்தரகர்கள் உள்ளனர். அவர்கள்தான் ஊழியர்கள் திருடிக் கொடுக்கும் ஆவணங்களை கார்ப்பரேட் கம்பெனிகளில் கொண்டு போய் சேர்ப்பது, அதற்கான பணத்தை ஊழியர்களிடம் கொடுப்பது போன்றவற்றில் ஈடுபட்டுள்ளனர். இவர்களை கார்ப்பரேட் நிறுவனங்களே இடைத்தரகர்களாக வேலைக்கு அமர்த்தி உள்ளன.

தற்போது பிடிபட்டுள்ள சைக்கியா மீது கடந்த 2009–ம் ஆண்டு இதுபோன்ற குற்றச்சாட்டு எழுந்து வழக்கு தொடரப்பட்டது. அப்போது அவரை வழக்கில் இருந்து கோர்ட்டு விடுவித்தது. ஆனால் அரசு ஆவணங்களை திருடிய சட்டப்பிரிவு பத்திரிகையாளருக்கு பொருந்தாது என்று கோர்ட்டு கூறியது.

10 வருடமாக நடைபெற்று வந்த அரசு ஆவண திருட்டை தடுக்க மோடி அரசு புதிய யுத்தியை கையாள முடிவு செய்துள்ளது. மந்திரிசபை நிகழ்ச்சி நிரலை பேப்பர்களில் குறிப்பிடாமல் நவீன தகவல் தொடர்பு சாதனங்கள் மூலம் மந்திரிகள், துறை செயலாளர்களுக்கு தெரிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post லக்னோவில் வேகமாக பரவுகிறது பன்றிக்காய்ச்சல்: 24 மணி நேரத்தில் 24 புதிய நோயாளிகள் கண்டுபிடிப்பு!!
Next post டெல்லியில் தொடரும் பாலியல் வன்முறை: ஓடும் காரில் நைஜீரிய சுற்றுலா பயணி கற்பழிப்பு- 4 பேர் கைது!!