சேலத்தில் அரசு பள்ளி ஆய்வுகூடத்தில் அமிலம் குடித்த பிளஸ்–2 மாணவர்!!

Read Time:1 Minute, 28 Second

a110d5eb-d99e-4cc3-87ce-bd812f3a61ed_S_secvpfசேலத்தில் அரசு பள்ளி ஆய்வுகூடத்தில் அமிலம் குடித்த பிளஸ்–2 மாணவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

சேலம் ஆத்தூர் அருகே உள்ள கெங்கவல்லி பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் சின்ராஜ் (17). இவர் விடுதியில் தங்கி வீரகனூர் அரசு பள்ளியில் பிளஸ்–2 படித்து வருகிறார்.

இந்த நிலையில் மாணவர் சின்ராஜ் நேற்று மாலை தொடர்ந்து வாந்தி எடுத்து கொண்டு இருந்தார். அப்போது அவருடன் படிக்கும் மாணவர்கள், ஏன் அடிக்கடி வாந்தி எடுக்கிறாய் என்று கேட்டனர். அதற்கு மாணவர் சின்ராஜ் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பள்ளி ஆய்வு கூடத்தில் தான் விளையாட்டாக அமிலத்தை குடித்ததாக தெரிவித்தார்.

இதையடுத்து மற்ற மாணவர்கள் விடுதி வார்டனிடம் கூறினார்கள். அவர் மாணவரின் பெற்றோரிடம் தெரிவித்தார். இதையடுத்து மாணவர் சின்ராஜை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புதுக்கோட்டை அருகே குடிபோதையில் மனைவியை கல்லால் அடித்து கொன்ற கணவர்!!
Next post லட்சாதிபதி ஆகும் அதிர்ஷ்டசாலி குரங்கு: தத்து எடுத்த தம்பதி சொத்துக்களை எழுதி வைக்க முடிவு!!