பணகுடி அருகே வடமாநில வாலிபர் மர்மச்சாவு: நிர்வாண நிலையில் பிணம் மீட்பு!!

Read Time:1 Minute, 30 Second

e8ee1734-9355-4044-863f-059e7b6edd92_S_secvpfநெல்லை மாவட்டம் பணகுடி அடுத்த பழவூர் அருகே உள்ள அம்பலவாணபுரத்தை சேர்ந்தவர் இலங்காமணி. இவருக்கு அப்பகுதியில் சொந்தமாக தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் உள்ள கிணற்றில் சம்பவத்தன்று சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் உடல் மிதந்தது.

நிர்வாண நிலையில் கிடந்த உடலை பார்த்து அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து பழவூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கிணற்றில் மிதந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து பழவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில் பிணமாக கிடந்தவர் வடமாநில வாலிபர் என தெரியவந்தது. அவரது பெயர் விபரம் என்ன? கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரை யாராவது அடித்து கொலை செய்து வீசி சென்றார்களா? என பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வெள்ளிச்சந்தை அருகே பட்டதாரி பெண் கற்பழிப்பு: வாலிபர் வெறிச்செயல்!!
Next post சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு நள்ளிரவு 12 மணிவரை பரபரப்பை ஏற்படுத்திய பெண்!!