செங்குன்றத்தில் கல்லூரி மாணவருக்கு அரிவாள் வெட்டு!!

Read Time:1 Minute, 45 Second

42a088f4-a8b2-4328-8905-3097705779e5_S_secvpfசெங்குன்றம் எடப்பாளையம் ஜீவா நகரை சேர்ந்தவர் ஜீவா (18). இவர் சென்னை மாநில கல்லூரியில் பி.எஸ்.சி. படித்து வருகிறார். இவர் இன்று காலையில் கல்லூரி செல்வதற்காக செங்குன்றம் காவல் உதவி மையம் அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்து நின்றார்.

அப்போது அங்கு 4 பேர் முகமூடி அணிந்து வந்தனர். 4 பேரும் கண் இமைக்கும் நேரத்தில் அரிவாளால் ஜீவாவை சரமாரியாக வெட்டினர்.

இதை பார்த்து பொதுமக்கள் அங்கிருந்து அலறி ஓடினர். ஜீவாவின் தலை, கை, கால்களில் வெட்டு விழுந்தது. 4 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

தகவல் அறிந்ததும் செங்குன்றம் போலீசார் விரைந்து சென்று ரத்த வெள்ளத்தில் மிதந்த ஜீவாவை சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து இன்ஸ்பெக்டர் சம்பத் வழக்கு பதிவு செய்து ஜிவாவிடம் விசாரணை நடத்தியதில் அவர் முன்விரோதம் காரணமாக பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் தான் தன்னை அரிவாளால் வெட்டியதாக கூறினார்.

இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பட்டபகலில் நடந்த இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முசிறி: மாணவிகளிடம் தவறாக நடக்க முயன்ற அரசு பள்ளி ஆசிரியர்கள் 2 பேர் தற்காலிக பணி நீக்கம்!!
Next post திருவண்ணாமலையில் கள்ளக்காதலி உயிரோடு எரித்து கொலை: வேன் டிரைவர் கைது!!