சேலம் எஸ்.கே.எஸ். ஆஸ்பத்திரியில் 3 வயது சிறுவனின் துண்டித்த விரலை ஒட்ட வைத்து சாதனை!!

Read Time:3 Minute, 36 Second

43b35771-05d7-4b2b-bddd-09785de1b70b_S_secvpfகிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் தாலுகா ஜெகதாப் கிராமத்தை சேர்ந்தவர் ஜெகதீசன். இவரது 3 வயது மகன் சசிகுமார். இவன் யாரும் எதிர்பாராத நேரத்தில் நெல் அறுவடை எந்திரத்தில் கையை வைத்துவிட்டான். இதில் சிறுவனின் வலது கை கட்டை விரல் நசுங்கி துண்டானது.

இதையடுத்து சசிகுமாரை சேலம் எஸ்.கே.எஸ். ஆஸ்பத்திரிக்கு 3 மணி நேரத்துக்குள் கொண்டு வந்தனர். உடனடியாக ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். சுரேஷ்குமார் அந்த சிறுவனை அறுவை சிகிச்சை பிரிவில் சேர்த்து பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மூலமாக துண்டிக்கப்பட்ட நரம்பு, ரத்த நாளங்கள், விரலின் எலும்புகள் மற்றும் எலும்புத் தசைகள் அனைத்தையும் அதிநவீன மைக்ரோஸ் கோப் கருவியின் உதவியுடன் அறுவை சிகிச்சை செய்தார். இந்த சிகிச்சை இரவு 10 மணிக்கு தொடங்கி அதிகாலை 4 மணி வரை 6 மணி நேரம் நடந்தது.

ஒருவாரம் கழித்து கைவிரல் முற்றிலும் குணப்படுத்தி சிறுவனை பத்திரமாக வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். எஸ்.கே.எஸ். மருத்துவமனையை பற்றி சிறுவனின் பெற்றோர்கள் கூறும் போது, மிகச்சிறந்த முறையில் எனது மகனுக்கு அறுவை சிகிச்சை செய்து கட்டை விரலை மீண்டும் இயக்க செய்த டாக்டருக்கும், மருத்துவமனைக்கும் நன்றி தெரிவித்தனர்.

இது குறித்த அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சுரேஷ்குமார் கூறியதாவது:–

துண்டிக்கப்பட்ட உறுப்புகளை ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு தண்ணீர் உள்ளே போகாத வண்ணம் இருக்கி கட்டிக்கொள்ள வேண்டும். பிறகு அதனை சுற்றி ஐஸ்கட்டிகளை வைத்து ஐஸ்பெட்டியில் போட்டு 6 மணி நேரத்திற்குள் மருத்துவமனைக்கு எடுத்து செல்ல வேண்டும். துண்டிக்கப்பட்ட உறுப்பிற்கும் ஐஸ்கட்டிக்கும் நேரடியாக தொடர்பு இருக்கக் கூடாது.

மேலும் கை, கால் உறுப்புகள் இது போன்ற விபத்துகளில் துண்டிக்க நேர்ந்தால் அதை ஒட்டு உறுப்பு அறுவை சிகிச்சை (பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை) மூலம் குணப்படுத்த 24 மணி நேர சேவை மற்றும் தேவையான அனைத்து நவீன வசதிகளும் எஸ்.கே.எஸ். ஆஸ்பத்திரியில் உள்ளது என்றும், இந்த சிறுவனுக்கு வெற்றிகரமாக ஆபரேசன் செய்யப்பட்டது குறித்தும் விளக்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் சுரேஷ்குமார் விஸ்வநாதன், சி.இ.ஒ.சிற்பி, துணை பொது மேலாளர் (மார்க்கெட்டிங்) பாஷா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருமண வரவேற்புக்கு சென்ற 7 வயது சிறுமி கற்பழித்து கொலை!!
Next post 3 வயது சிறுவன் அடித்துக்கொலை?: தாயிடம் விசாரணை– கள்ளக்காதலன் ஓட்டம்!!