தஞ்சை அருகே மனைவி–கள்ளக்காதலன் வெட்டிக் கொலை: தொழிலாளி வெறிச்செயல்!!

Read Time:2 Minute, 36 Second

bcdad669-fdc4-4d89-9ed2-8910763f97e0_S_secvpfதஞ்சை அருகே உள்ள பூண்டி மலையர் நத்தம் தெற்கு தெருவை சேர்ந்தவர் கருணாநிதி. சலவைத்தொழிலாளி.

இவரது மனைவி ஜெயலெட்சுமி (42). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். அவர் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.

அதே பகுதியை சேர்ந்தவர் வீரமணி (42), விவசாயி. இவருக்கு திருமணமாகி 5 வயதில் ஒரு ஆண் குழந்தையும், ஒரு வயதில் பெண் குழந்தையும் உள்ளனர்.

இந்த நிலையில் வீரமணிக்கும் ஜெயலெட்சுமிக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. கடந்த 3 வருடமாக இந்த தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த விஷயம் கருணாநிதிக்கு தெரிய வந்தது. அவர் மனைவியை கண்டித்தார். ஆனாலும் அவர் கள்ளத்தொடர்பை கைவிடவில்லை. இதனால் ஆத்திரத்தில் இருந்தார்.

நேற்று இரவு 12.30 மணியவில் கருணாநிதி வெளியில் சென்று விட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் கொல்லைப்புறத்தில் வீரமணியும், ஜெயலெட்சுமியும் உல்லாசமாக இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

ஆத்திரம் அடைந்த அவர் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து வீரமணியை சரமாரி வெட்டினார். அவரது கழுத்து, முகம் பகுதியில் பலத்த வெட்டு காயம் விழுந்தது. இதில் சம்பவ இடத்தில் அவர் பிணமானார்.

அதன் பின்னரும் ஆத்திரம் தீராத கருணாநிதி அரிவாளால் ஜெயலெட்சுமியை வெட்டினார். இதில் அவரது முகம் சிதைந்தது. அவரும் சம்பவ இடத்தில் இறந்தார்.

அதன் பின்னர் கருணாநிதி அம்மாப்பேட்டை போலீஸ் நிலையம் சென்று சரண் அடைந்தார். உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கொலை செய்யப்பட்ட வீரமணி, ஜெயலெட்சுமி பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாபநாசம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கொலையாளி கருணாநிதியை கைது செய்தனர்.

இந்த இரட்டை கொலை சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கண்டித்தும் கள்ளக்காதலை கைவிட மறுத்த பெண்ணின் அழகை சிதைக்க ஆசிட் வீசிய கணவன் கைது!!
Next post ராஜபாளையத்தில் ராணுவ வீரர் தனக்குதானே கத்தியால் குத்தி தற்கொலை!!