அறையில் அடைத்து கல்லூரி மாணவிக்கு செக்ஸ் தொல்லை: 2 வாலிபர்கள் கைது!!

Read Time:3 Minute, 14 Second

b7259042-a50b-404f-9c55-76b039e4da7a_S_secvpfகோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்றுமுன்தினம் டெலிபோனில் ஒரு இளம் பெண் பேசினார்.

அழுது கொண்டே பேசிய அவர் தன்னை 2 வாலிபர்கள் கோவை சவுரிபாளையத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் அடைத்து வைத்து செக்ஸ் தொல்லை கொடுக்கிறார்கள்.

உடனே வந்து என்னை மீட்டுச்செல்லுங்கள் என்று கதறினார். மறு நிமிடமே கோவை மாநகர போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த இளம்பெண்ணை மீட்டனர். விசாரணையில் அவர் தனது பெயர் அபிராமி(வயது 22). சென்னை பல்லாவரத்தை சேர்ந்த நான் கல்லூரியில் படித்து வருகிறேன் என்றார்.

அந்த வாலிபர்களில் ஒருவர் புதுச்சேரியை சேர்ந்த ஷாஸ்நாத்(27) என்பதும், மற்றொருவர் கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த ஆரிஷ் முகமது(25) என்பதும் தெரியவந்தது. ஷாஸ்நாத் துபாயில் உள்ள கடிகார நிறுவனத்தில் வேலைபார்க்கிறார்.

அபிராமியை சந்தித்த அவர் ‘உன்னை நான் காதலிக்கிறேன், உன்னையே திருமணம் செய்து கொள்கிறேன்’ என்று ஆசைவார்த்தை கூறி கோவைக்கு அழைத்து வந்துள்ளார்.

சவுரிபாளையத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அடைத்து வைத்து செக்ஸ் தொல்லை கொடுத்திருக்கிறார். பின்னர் ஆரிஷ் முகமதுவுக்கும் தகவல் கொடுத்து அவரை வரவழைத்திருக்கிறார். அவரும் அபிராமிக்கு செக்ஸ் தொல்லை கொடுத்திருக்கிறார்.

நம்மை நம்பவைத்து ஷாஸ்நாத் ஏமாற்றி விட்டான் என்பதை அறிந்த அபிராமி போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார். அவர்கள் விரைந்து சென்று அபிராமியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

பின்னர் அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் கோவை வந்து அபிராமியை அழைத்துச்சென்றனர்.

பெண்ணை அறையில் அடைத்து சித்ரவதை செய்ததாக ஷாஸ்நாத், ஆரிஷ் முகமது ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது அறையில் அடைத்தல்(294), ஆயுதங்களால் தாக்குதல்(323), கொலை மிரட்டல்(506) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கிராமத்து காதலை யதார்த்தமாக சொல்லும் வெத்து வேட்டு!!
Next post மீண்டும் சூர்யாவுடன் ஜோடி சேரும் சமந்தா!!