ராஜஸ்தானுக்கு சுற்றுலா வந்த ஜப்பானியப் பெண்ணை கற்பழித்த முக்கிய குற்றவாளி போலீசில் சரண்!!

Read Time:1 Minute, 54 Second

c72cdcc6-5cb8-47b4-9f57-42aaf2aa023a_S_secvpfஜப்பானை சேர்ந்த சுமார் 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ராஜஸ்தானை சுற்றிப்பார்க்க இந்தியா வந்தார். ஜெய்ப்பூரில் உள்ள ஜல் மஹால் பகுதியை கண்டு களித்துக் கொண்டிருந்த அந்தப் பெண்ணிடம் தன்னை உள்ளூர் வழிகாட்டியாக அறிமுகப்படுத்திக் கொண்ட ஒரு வாலிபர் மேலும் சில பகுதிகளை சுற்றிக்காட்டுவதாக கூறி அவரை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்றார்.

கடந்த 8-ம் தேதி இரவு டுடு பகுதியில் அவரை பலவந்தப்படுத்தி கற்பழித்த அந்த வாலிபர் அந்தப் பெண்ணின் செல்போன், கேமரா மற்றும் 4 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தலைமறைவாகி விட்டார்.

இது தொடர்பான செய்தி வெளியானதையடுத்து, இந்த கற்பழிப்பு சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த குற்றவாளியை தேடி வந்தனர். அவனைப் பற்றிய தகவல் அளிப்பவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசும் அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையில், கடந்த 10-ம் தேதி சந்தேகத்தின் பேரில் 7 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் தீவிரமாக விசாரித்து வந்தனர். இந்நிலையில், ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் பதுங்கியிருந்த குற்றவாளி அஜித் சிங் சவுத்ரி(25) இன்று போலீசாரிடம் சரண் அடைந்தான்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காரை நிறுத்துவதற்காக சாலையை ஆக்கிரமித்த ஷாரூக்கான்: அப்புறப்படுத்திய மும்பை நகராட்சி!!
Next post தூத்துக்குடியில் இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்ய மறுப்பு: வாலிபருக்கு வலைவீச்சு!!