பாரிமுனையில் லிப்டுக்கு தோண்டிய பள்ளத்தில் விழுந்து ஊழியர் பலி!!

Read Time:1 Minute, 2 Second

60f6c438-2bb9-4f8b-93a6-9e4f61a1e3b1_S_secvpfபாரிமுனை, தாத்தாமுத்தையப்பன் தெருவில் 4 மாடி புதிய கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதில் லிப்டு அமைக்கும் பணியில் ஆவடியைச் சேர்ந்த மோகன் (32) மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

நேற்று இரவு பணி நடந்து கொண்டிருந்தபோது மோகன் முதல் மாடியில் நின்றார். திடீரென அவர் நிலை தடுமாறி லிட்டுக்கு தோண்டிய பள்ளத்துக்குள் விழுந்தார்.

தலையில் பலத்த காயம் அடைந்த அவரை மற்ற ஊழியர்கள் மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி மோகன் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து எஸ்பிளனேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கோவையில் ஆபாச படம்–புதுப்பட சி.டி.தயாரிக்கும் தொழிற்சாலை கண்டுபிடிப்பு: 2 பேர் கைது!!
Next post நட்சத்திர ஓட்டல்களில் காதலர் தின கொண்டாட்டத்துக்கு தடை விதிக்க இந்துமக்கள் கட்சி மனு!!