காதல் திருமணம் செய்ய 10–ம் வகுப்பு மாணவியுடன் ஓட்டம் பிடித்த 12–ம் வகுப்பு மாணவன்!!

Read Time:2 Minute, 52 Second

3cc9d591-8fe5-47ac-94ff-7f9725dcae6e_S_secvpfசேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த அமர குந்தி செட்டிக்குப்பம் பள்ளம் பகுதியை சேர்ந்தவர் பூபதி. இவரது 15 வயது மகள் தொளசம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வருகிறார்.

இதே போன்று பேபியின் எதிர்வீட்டை சேர்ந்த சுந்தரம் என்பவரின் 17 வயது மகன் அதே பள்ளியில் 12–ம் வகுப்பு படித்து வருகிறான்.

இவர்கள் இருவரும் தினமும் 3 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று படித்து வருகின்றனர். நடந்து செல்லும் போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. கடந்த மாதம் 31–ந்தேதி காலையில் பள்ளிக்கு செல்வதாக கூறி விட்டு சென்றவர்கள் அன்று இரவு வரை வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை .இதுகுறித்து மாணவ–மாணவிகளின் பெற்றோர் தொளசம்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

பள்ளியில் அவர்களுடன் படிக்கும் சக மாணவ–மாணவிகள், அவர்களது சொந்த ஊரில் உள்ள பொது மக்கள் , உறவினர்கள் என்று 50–க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில் மாணவ–மாணவி இருவரும் கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்ததும், பெற்றோர்களுக்கு காதல் விவகாரம் தெரிய வந்ததால், இருவரும் வெளியூர் சென்று திருமணம் செய்து கொண்டதும் விசாரணையில் தெரியவந்தது.

அவர்களை பற்றி பல இடங்களில் விசாரித்த போலீசார் இருவரையும் பிடிக்க முடியவில்லை தற்போது போலீசார் இருவருடைய போட்டோக்களை கொண்டு பல இடங்களில் தேடி வருகின்றனர்.

போட்டோவில் உள்ள இருவரையும் எங்கு பார்த்தாலும் உடனே தொளசம் பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்க வேண்டுமாய் போலீசார் கேட்டுக்கொண்டு உள்ளனர்.

மேலும், போலீஸ் நிலைய தொலைபேசி எண் 04290 244346, இன்ஸ்பெக்டரின் செல்போன் எண் 94981 67780 மற்றம் சப்–இன்ஸ்பெக்டரின் செல்போன் எண் 94981 45111 ஆகியவற்றில் தொடர்பு கொண்டு விவரம் தெரிவிக்குமாறும் போலீசார் கேட்டுக்கொண்டு உள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நட்சத்திர ஓட்டல்களில் காதலர் தின கொண்டாட்டத்துக்கு தடை விதிக்க இந்துமக்கள் கட்சி மனு!!
Next post குஜராத்தில் 15–ந்தேதி திறப்புவிழா: எனக்கு கோவிலா?- மோடி எதிர்ப்பு!!