முதல் மனைவிக்கு தெரியாமல் 2–ம் திருமணம் செய்த வாலிபர் கைது!!

Read Time:1 Minute, 33 Second

6fc43bc4-abca-49e6-a8c4-bba67f89e17e_S_secvpfவாடிப்பட்டி அருகே விராலிப்பட்டி சிறுமலை மீனாட்சிபுரத்தில் குடியிருந்து வருபவர் போஸ் (வயது 25), லோடுமேனாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பாண்டியம்மாள் (23). இவர்களுக்கு திருமணமாகி பாண்டி(2) மகன் உள்ளான்.

திருமணத்தின் போது 10 பவுன் நகையும், ரூ.1.50 லட்சம் வரதட்சனையும் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் பாண்டியம்மாளை போசின் தாயார் சுந்தரியம்மாள்(50), தங்கை நந்தினி (20) ஆகியோர் சேர்ந்து கொண்டு மேலும் கூடுதலாக வரதட்சனைகேட்டு தகராறு செய்துவந்தனர்.

கடந்த 3 மாதங்களுக்கு முன் போசின் அத்தை மகள் ரம்யா(19)வை 2–ம் திருமணம் செய்து கொண்டு போஸ் தலைமறைவானார்.

இதுசம்பந்தமாக சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாண்டியம்மாள் கொடுத்த புகாரின்பேரில் சமயநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதாதேவி, சப்–இன்ஸ்பெக்டர் சத்திய லீலா ஆகியோர் போசை வலைவீசி தேடிவந்தனர்.

இந்நிலையில் நேற்று விராலிப்பட்டிக்கு வந்த போசை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மாணவிகளுக்கு செல்போனில் ஆபாச படம் காட்டிய ஆசிரியர் கைது!!
Next post பெண் போலீஸ் மானபங்கம்: ஓட்டல் அதிபர் மகன் கைது!!