திருகோணமலையில் கிளேமோர். ஐவர் பலி 14பொதுமக்கள் படுகாயம்

Read Time:1 Minute, 19 Second

Trinco+small.gifதிருகோணமலை அனுராதபுரம் சந்தியில் இன்று நண்பகல் நடைபெற்ற கிளேமோர்த் தாக்குதலில் நான்கு படையினர் உட்பட ஐவர் கொல்லப்பட்டுள்ளனர். பதினான்கு பேர் காயமடைந்துள்ளனர். முச்சக்கர வாகனமொன்றில் பொருத்தப்பட்டு தொலைஇயக்கி மூலம் இக்கிளேமோர்க்குண்டு வெடிக்கவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸ் காவலரண் ஒன்றிற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த குறித்த முச்சக்கரவண்டியை படைவீரர்களின் குழுவொன்று சோதனையிட முற்பட்டபோதே தாக்குதல் நிகழ்ந்ததாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இத்தாக்குதலில் இரு பொலிஸார், சிப்பாய், ஊர்காவற்படைவீரர் உட்பட ஐவர் கொல்லப்பட்டனர். காயமடைந்த பதினான்கு பேரில் கவலைக்கிடமான நிலையில் இருந்த மூவர் கண்டி, கொழும்பு வைத்தியசாலைகளுக்கு மேலதிக சிகிச்சைகளுக்காக அனுப்பப்பட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ராஜீவ்காந்தி, பிரபாகரன் ரகசிய ஒப்பந்தம்-பாலசிங்கம் பகீர் தகவல்
Next post ஜனாதிபதி – இந்திய வெளியுறவு செயலாளர் சந்திப்பு