கும்மிடிப்பூண்டியில் இன்று நடக்க இருந்த சிறுமியின் திருமணம் தடுத்து நிறுத்தம்!!

Read Time:2 Minute, 15 Second

23a0751e-7f1a-49bd-b1d5-e1faafef4d00_S_secvpfகும்மிடிப்பூண்டியை அடுத்த தேர்வாய் கிராமத்தில் வசிக்கும் 17 வயது சிறுமிக்கும், நாகராஜ கண்டிகையை சேர்ந்த தனியார் கம்பெனி ஊழியருக்கும் இன்று கவரப்பேட்டையில் உள்ள மண்டபத்தில் திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்து இருந்தனர்.

இது குறித்து மாவட்ட கலெக்டர் வீரராகவராவுக்கு புகார்கள் வந்தன. சிறுமியின் திருமணத்தை தடுத்து நிறுத்த அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

இதற்கிடையே நேற்று மாலை திருமண மண்டபத்தில் மணமக்கள் வரவேற்பு நிகழ்ச்சி நடத்த உறவினர்கள் ஏற்பாடுகள் செய்தனர். தாசில்தார் பால்சாமி, இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் போலீசார் விரைந்து சென்று மணமகன் மற்றும் சிறுமியின் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சிறுமிக்கு திருமணம் செய்து வைப்பது சட்டப்படி குற்றம். உடனடியாக திருமண ஏற்பாடுகளை நிறுத்த வேண்டும் என்றனர்.

இதனை கேட்டு ஆத்திரம் அடந்த சிலர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் திருமணத்தை நிறுத்துவதாக கூறி சிறுமியுடன் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மண்டபத்தில் இருந்து வெளியேறினர். திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டது.

இதனால் மணமகனும், அவரது உறவினர்களும் சோகம் அடைந்தனர். மணமக்களை வாழ்த்த வந்தவர்கள் ஏமாற்றுத்துடன் திரும்பி சென்றனர்.

சிறுமியின் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குடியாத்தத்தில் ஆஸ்பத்திரியில் மத பிரசாரம் செய்த 2 பேர் கைது!!
Next post வத்தலக்குண்டுவில் ரேசன் கடை ஊழியர் கல்லால் தாக்கி படுகொலை!!