கர்ப்பிணியாக்கிவிட்டு திருமணத்துக்கு மறுப்பு: தட்டிக்கேட்ட இளம்பெண்ணுக்கு கொலைமிரட்டல்!!

Read Time:2 Minute, 22 Second

316d5ac4-ceb9-46a8-9da6-fc42471d6526_S_secvpfதிருக்கோவிலூர் அருகே செம்படை கிராமத்தை சேர்ந்தவர் சேகர். இவரது மகள் கிருஷ்ணவேணி (வயது 19). இவரும் எடையூர் கிராமத்தை சேர்ந்த நடராஜன் மகன் மோகன்தாஸ் (25) என்பவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

தனிமையில் சந்தித்து பேசும்போது திருமணம் செய்து கொள்வதாக மோகன்தாஸ் ஆசைவார்த்தை கூறி கிருஷ்ணவேணியிடம் உல்லாசம் அனுபவித்து வந்தார்.

இதில் கிருஷ்ணவேணி கர்ப்பம் அடைந்தார். இந்த விவரத்தை மோகன்தாசிடம் கூறி தன்னை உடனடியாக திருமணம் செய்து கொள்ளும்படி கிருஷ்ணவேணி வலியுறுத்தியபோது திருமணத்துக்கு முன்பு கர்ப்பம் அடைந்தால் ஊரார் கேலி செய்வார்கள் எனவே கர்ப்பத்தை கலைத்துவிட்ட பின்னர் திருமணம் செய்து கொள்வதாக மோகன்தாஸ் உறுதி அளித்தார்.

இதனை நம்பி கிருஷ்ணவேணியும் கர்ப்பத்தை கலைத்தார். பின்னர் மோகன்தாசை சந்தித்து திருமணம் செய்து கொள்ளுமாறு கிருஷ்ணவேணி கேட்டபோது அதற்கு மோகன்தாஸ் மறுத்துவிட்டார். மேலும் மோகன்தாசின் பெற்றோரிடம் இதுபற்றி கிருஷ்ணவேணி முறையிட்டபோது அவர்கள் கிருஷ்ணவேணியை கொலை செய்துவிடுவதாக மிரட்டினர்.

இதனால் ஏமாற்றம் அடைந்த கிருஷ்ணவேணி இது குறித்து திருக்கோவிலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேவதி, சப்–இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி ஆகியோர் வழக்கு பதிவு செய்து திருமணத்துக்கு மறுத்த மோகன்தாசையும், கிருஷ்ணவேணிக்கு கொலை மிரட்டல் விடுத்த மோகன்தாசின் தந்தை நடராஜன், தாய் விஜயா ஆகிய 3 பேரையும் தேடி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சேலத்தில் மாநகராட்சி தொழிலாளி குத்திக்கொலை: 4 ரவுடிகள் கைது!!
Next post வெளிநாட்டில் சிக்கி தவிக்கும் கணவரை மீட்டு தரவேண்டும்: கலெக்டரிடம் இளம்பெண் மனு!!