கர்ப்பமாக இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள்…!!!

Read Time:2 Minute, 24 Second

10-1423553270-1pregnenacuதற்போது திருமணமான உடனே குழந்தைப் பெற்றுக் கொள்ள பல தம்பதியினர் விரும்புவதில்லை. அதற்காக அவர்கள் உறவில் ஈடுபடும் போது கருத்தரிக்காமல் இருப்பதற்கு, பெண்கள் கருத்தடை மாத்திரைகளை எடுத்துக் கொள்கின்றனர்.

இருப்பினும் சில நேரங்களில் அந்த கருத்தடை மாத்திரை சரியாக வேலை செய்யாமல் போவதால், எதிர்பாராதவிதமாக கருத்தரிக்க நேரிடுகிறது. அப்படி கருத்தடை மாத்திரைகளை எடுக்கும் போது கருத்தரித்து இருந்தால் வெளிப்படும் அறிகுறிகளை பார்க்கலாம்..

கருத்தடை மாத்திரை எடுக்கும் போது, திடீரென்று மாதவிடாய் சுழற்சி தாமதமானாலோ அல்லது மாதவிடாய் சுழற்சி ஏற்படாமல் இருந்தாலோ, அதுவும் கர்ப்பமாக இருப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என்பதைக் குறிக்கும்.

திடீரென்று அடிக்கடி சிறுநீர் கழிக்க ஆரம்பித்தால், கருப்பையில் கருமுட்டை தங்கி பெரிதாகி, சிறுநீர்ப்பையை அழுத்துகிறது என்று அர்த்தம். எனவே இத்தகைய அறிகுறியை சாதாரணமாக நினைக்காதீர்கள்.

கருத்தடை மாத்திரை எடுத்துக் கொண்டிருக்கும் போது, மார்பகங்களில் வலி எடுக்க ஆரம்பித்தாலோ அல்லது மார்பகங்கள் வீக்கமாக இருப்பது போல் உணர்ந்தாலோ, அதுவும் வயிற்றில் கரு உருவாகியுள்ளதை வெளிப்படுத்தும் ஒரு அறிகுறியாகும்.

பொதுவாக கர்ப்பமாக இருக்கும் போது உணவுகளின் மீது நாட்டம் அதிகரிக்கும். அப்படி உங்களுக்கு திடீரென்று உணவுகளின் மீது நாட்டம் அதிகரித்தால், அதுவும் ஊறுகாய், புளிப்பான உணவுப் பொருட்களின் மீது ஆசை அதிகரித்தால், அது கர்ப்பமாக இருப்பதை வெளிப்படுத்தும் செயலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சுதந்­திர தின நிகழ்வில் கலந்து கொண்­டமை: சம்­பந்­தனின் முடிவு சரியா? தவறா? –திரு­ம­லை­நவம் (கட்டுரை)!!
Next post திண்டுக்கல்லில் 14 வயது சிறுமிக்கு திருமணம்!!