கள்ளக்காதலியின் மகளை கற்பழிக்க முயன்ற வாலிபர்: 3 பிரிவுகளில் போலீசார் வழக்கு!!

Read Time:2 Minute, 45 Second

91248523-8b2f-4ca6-9662-7ce01f5758d1_S_secvpfநாகர்கோவில் பள்ளிவிளையைச் சேர்ந்தவர் ரெஞ்சித் (வயது 27). கூலித்தொழிலாளி. இவருக்கும், ஆசாரிப்பள்ளம் பகுதியில் கணவரை பிரிந்து வாழும் ஒரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. அந்த பெண்ணுக்கு 14 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். அவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 8–ம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த பெண் ரெஞ்சித்தை 2–வது கணவராக திருமணம் செய்து கொண்டார். இதனால் ரெஞ்சித் அடிக்கடி பெண்ணின் வீட்டுக்கு சென்று வந்தார். நேற்று ரெஞ்சித் குடிபோதையில் பெண்ணின் வீட்டுக்கு சென்றார். அப்போது அந்த பெண் வெளியே சென்று இருந்தார். வீட்டில் அவரது மகள் மட்டும் தனியாக இருந்தார்.

போதையில் இருந்த ரெஞ்சித் வீட்டுக்குள் நுழைந்ததும் மாணவியை கற்பழிக்க முயன்றார். இதில் மாணவியின் ஆடைகள் கிழிந்தது. உடலிலும் காயங்கள் ஏற்பட்டது. அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் வெளியே சென்ற பெண்ணும் வீட்டுக்கு வந்து விட்டார்.

அவர் 2–வது கணவரே மகளை மானபங்கம் செய்ததை கண்டு ஆவேசமானார். அருகில் கிடந்த கட்டையை எடுத்து அடித்தார். வலி தாங்க முடியாத ரெஞ்சித் வீட்டில் இருந்த 2 பவுன் நகை மற்றும் ரூ.21 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு தப்பி ஓடினார்.

இதற்கிடையே ரெஞ்சித்தின் பலாத்கார முயற்சியால் படுகாயம் அடைந்த மாணவி ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் இதுபற்றி போலீசில் புகார் செய்தார்.

குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டம் 2012 மற்றும் திருட்டு, காயப்படுத்துதல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் ரெஞ்சித் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவான ரெஞ்சித்தை போலீசார் தேடி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கோவிலில் நிர்வாண படம் எடுத்துக்கொண்ட சகோதரிகள்!!
Next post புற்றுநோயால் தலைமுடியை இழந்த பெண்களுக்கு கூந்தலை தானமாக வழங்கிய கல்லூரி மாணவிகள்!!