ஜெராக்ஸ் எடுக்க சென்ற 6–ம் வகுப்பு மாணவியிடம் சில்மிஷம்: கடை உரிமையாளர் கைது!!

Read Time:1 Minute, 43 Second

88e48fb2-407c-41e3-9f55-0319f2c47236_S_secvpfகடம்பத்தூரை அடுத்த வெண்மனபுதூரை சேர்ந்த 6–ம் வகுப்பு மாணவி ரோஜா (12) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). திருவள்ளூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார்.

இன்று காலை ரோஜா, தமிழ் பாட புத்தகத்தை ஜெராக்ஸ் எடுப்பதற்காக கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரே உள்ள கடைக்கு சென்றார்.

அப்போது கடை உரிமையாளர் ரகுபதி, மாணவியை நைசாக பேசி கடைக்குள் அழைத்தார். திடீரென அவர் ரோஜாவிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார். பின்னர் இது குறித்து வெளியில் யாரிடமும் கூறக்கூடாது என்று கூறி மிரட்டி அனுப்பி விட்டார்.

காலையில் பள்ளிக்கு சென்ற ரோஜா வகுப்பறையில் கதறி அழுதார். ஆசிரியர் விசாரித்த போது, ஜெராக்ஸ் கடை உரிமையாளர் ரகுபதி மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு மிரட்டி இருப்பது தெரிந்தது.

இது குறித்து மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் கடம்பத்தூர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து ரகுபதியை கைது செய்தனர். அவர் கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலத்தில் இரவு காவலாளியாகவும் பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விடுதியில் குழந்தை பெற்ற 6 ஆம் வகுப்பு மாணவி: ஒடிசாவில் தொடரும் அவலம்!!
Next post நெல்லை பஸ் நிலையத்தில் நிர்வாணமாக ஓடிய மன நோயாளி பெண்ணால் பரபரப்பு!!