பிள்ளை பெற்றுத்தர மறுத்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த விடுதி உரிமையாளர் உள்பட 5 பேர் கைது!!

Read Time:2 Minute, 38 Second

dffde26e-295f-45fe-9d26-01a12a6a9c99_S_secvpfஉத்தரப்பிரதேசம் மாநிலத்தின் மீரட் நகரில் குழந்தை பெற்றுத் தரும்படி வற்புறுத்தி சட்டக் கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த 22 வயது இளம்பெண் இங்குள்ள மீரட் நகரில் இருக்கும் ஒரு தங்கும் விடுதியில் பகுதி நேர ஊழியராக பணியாற்றியபடி, சட்டக் கல்லூரியில் படித்து வருகிறார்.

இவருடன் பேச்சுவழக்கத்தில் நட்பை வளர்த்துக் கொண்ட விடுதியின் உரிமையாளர் மெல்ல அந்த இளம் பெண்ணுக்கு காமவலை வீசத் தொடங்கினார். என் குழந்தையை உன்னுடைய கருப்பையில் நீ சுமந்து பெற்றுதர வேண்டும் என பல சந்தர்ப்பங்களில் அவர் ஆசை வார்த்தை கூறினார்.

நாம் இருவரும் சேர்ந்து உடலுறவின் மூலம்தான் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது இல்லை. எனது விந்தணுவையும், உனது கருமுட்டையையும் இணைத்து, டெஸ்ட் டியூப் மூலம் உன்னைப் போலவே அழகான குழந்தையை எனக்கு நீ பெற்றுத்தர வேண்டும் என அவர் தொடர்ந்து வற்புறுத்த ஆரம்பித்தார்.

அவரது விபரீத ஆசைக்கு அந்த விடுதியை சேர்ந்த சிலரும் வக்காலத்து வாங்கினர். இந்த கோரிக்கையை ஏற்றுக் கொள்ள அந்த மாணவி மறுத்தார்.

இந்நிலையில், கடந்த 3-ம் தேதி 4 பேருடன் வந்து அடித்து, உதைத்து, கட்டிவைத்த விடுதியின் உரிமையாளர் தன்னை கற்பழித்து விட்டதாக அந்த இளம்பெண் நேற்று போலீசில் புகார் அளித்தார்.

இதனையடுத்து, விரைந்து நடவடிக்கை எடுத்த போலீசார் இன்று காலை விடுதியின் உரிமையாளர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த மேலும் 4 பேரை கைது செய்து, வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட மாணவி, மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அதிகாலை 4 மணி வரை கும்மாளம் – நடிகர் மீது வழக்கு!!
Next post டீ கடையில் ஆட்டம் போட்ட சிவகார்திகேயன்!!