கோவிலில் நிர்வாண படம் எடுத்துக்கொண்ட சகோதரிகள்!!

Read Time:2 Minute, 3 Second

kamboகம்போடியா நாட்டில், உலக பிரசித்தி பெற்ற அங்கோர்வாட் கோவில் உள்ளது. இந்தக் கோவில் இந்துக்கோவிலாக இருந்து புத்த மதக் கோவிலாக மாறிய கோவில். சர்வதேச பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக விளங்குகிற இந்தக்கோவிலில் உலகமெங்கும் இருந்து சுற்றுலாப்பயணிகள் குவிகிறார்கள்.

அமெரிக்காவில் இருந்துவந்த லின்ட்சே ஆதம்ஸ் (வயது 22), லெஸ்லீ (20) ஆகிய இரு சகோதரிகளும் கோவில் வளாகத்தில் ஒருவரை ஒருவர் உடலில் எந்தவொரு உடையும் இன்றி நிர்வாணமாக புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

இந்த சகோதரிகள் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது. தாங்கள் செய்தது தவறுதான் என அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். கடந்த 15 நாளில் இந்தக் கோவில் வளாகத்தில் இப்படி நிர்வாணப்படம் எடுத்துக்கொண்டவர்கள் பிடிபடுவது இது 2-வது முறை.

இந்தக் கோவில் வளாகத்தில் இப்படி நிர்வாணப்படம் எடுத்துக்கொண்ட பிரெஞ்சு சுற்றுலாப்பயணிகள் பிடிபட்டனர். அவர்களும் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். உடனே அவர்கள் நாடு கடத்தப்பட்டு விட்டனர்.

கோவில் நிர்வாகத்தை கவனிக்கிற அப்சரா ஆணையத்தின் செய்தி தொடர்பாளர் சாவ் சன் கெர்யா, இதுபற்றி கருத்து தெரிவிக்கையில், “அவர்களுக்கு இந்தக் கோவில் வளாகம் எந்தளவு புனிதமானது என தெரியாது. ஆனால் அவர்களது தரக்குறைவான செயல்கள், கோவிலின் புனிதத்தன்மையை பாதிக்கிறது” என கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நீதிபதி கொலை வழக்கில் பரோலில் வந்து தலைமறைவான கில்லாடி பெண் டாக்டர் கைது!!
Next post கள்ளக்காதலியின் மகளை கற்பழிக்க முயன்ற வாலிபர்: 3 பிரிவுகளில் போலீசார் வழக்கு!!