அதிகாலை 4 மணி வரை கும்மாளம் – நடிகர் மீது வழக்கு!!

Read Time:2 Minute, 4 Second

ram-charanராம்சரண் தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கிறார். தெலுங்கில் இவர் நடித்த மகதீரா படம் வெற்றிகரமாக ஓடியது. இந்த படம் தமிழிலும் படப்பிங் செய்து வெளியிடப்பட்டது. இவர் நடிகர் சிரஞ்சீவியின் மகன் ஆவார். ராம்சரண் வீடு ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ளது. இரவு நண்பர்களுக்கு அவர் விருந்து கொடுத்தார்.

இந்த விருந்து நிகழ்ச்சி வீட்டு மொட்டை மாடியில் நடந்தது. ஸ்ரீகாந்த் ரெட்டி மற்றும் நடிகர், நடிகைகள், நண்பர்கள் கலந்து கொண்டனர். மதுவும் பரிமாறப்பட்டதாக கூறப்படுகிறது. விடிய விடிய இந்த விருந்து நடந்தது. அப்போது ஒரே கூச்சல் கும்மாளமாக இருந்தது. இது பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. ஒலி பெருக்கியில் சத்தமாக பாட்டும் போட்டனர். இதனால் பக்கத்து வீட்டுக்காரர்களால் தூங்க முடியவில்லை. அதிகாலை 4 மணி வரை அவர்கள் கும்மாளம் நீடித்தது.

ராம்சரண் பக்கத்து வீட்டில் கவுதம் சுபாஸ் என்ற ஐ.பி.எஸ்.அதிகாரி வசிக்கிறார். அவர் இது குறித்து போலீசில் புகார் அளித்தார். போலீசார் விரைந்து வந்து ராம்சரணிடம் விசாரித்தனர். அப்போது என் வீட்டில் நான் விருந்து வைக்கிறேன். பாட்டு போடுகிறேன். பக்கத்து வீட்டுக்காரர்களை பொருட்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்று போலீசாரிடம் பேசி ரகளை செய்தார். இதையடுத்து அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொடுக்கல் வாங்கல் தகராறில் முன்விரோதம்: வீடு புகுந்து கும்பல் தாக்கியதால் தாய்–மகள் விஷம் குடித்தனர்!!
Next post பிள்ளை பெற்றுத்தர மறுத்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த விடுதி உரிமையாளர் உள்பட 5 பேர் கைது!!