துரைப்பாக்கத்தில் காதல் தோல்வியால் கல்லூரி மாணவர் தற்கொலை!!

Read Time:1 Minute, 43 Second

e5563366-c482-4bb3-9838-4465ecda7956_S_secvpfதிருநெல்வேலியைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் கார்த்திக் பிரபு. துரைப்பாக்கம் ராஜீவ்காந்தி சாலையில் உள்ள ஓட்டல் மேனேஜ்மெண்ட் கல்லூரியில் படித்து வந்தார். கல்லூரி அருகே உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்தார்.

இந்த நிலையில் கார்த்திக் பிரபு தங்கியிருந்த அறை கதவு நீண்ட நேரம் திறக்கப்படவில்லை. சந்தேகம் அடைந்த மற்ற மாணவர்கள் வந்து பார்த்தபோது மின் விசிறியில் அவர் தூக்கில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து துரைப்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் மற்றும் போலீசார் விரைந்து மாணவர் உடலை மீட்டு பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கார்த்திக் பிரபு இருந்த அறையில் கிடந்த நோட்டில் அவரது பெயரும், ஒரு பெண்ணின் பெயரும் சேர்த்து எழுதப்பட்டிருந்தது. எனவே அவர் காதல் தோல்வியால் தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

இதுபற்றி அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் சென்னைக்கு வந்து கொண்டு இருக்கிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருச்சூர் விமான நிலையத்தில் ரூ.4 கோடி போதை மருந்துடன் சிக்கிய இளம்பெண்!!
Next post மேற்கு வங்காளத்தில் இருந்து கடத்தப்பட்ட பெண் ஓசூரில் மீட்பு: மது பாரில் ஆட வைத்து சித்ரவதை!!