நாகையில் காதல் மனைவியை எரித்து கொன்ற வாலிபர் கைது!!

Read Time:1 Minute, 24 Second

2d228a54-49d1-4fa9-9772-4b496533a329_S_secvpfநாகையை அடுத்த செல்லூர் சுனாமிகுடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (வயது 27), தொழிலாளி. இவரது மனைவி விஜயபாரதி (17). இவர்கள் காதலித்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.

இந்தநிலையில் ஆனந்தராஜ், விஜயபாரதியிடம் வரதட்சணை கேட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று மீண்டும் தகராறு ஏற்பட்டதால் ஆத்திரம் அடைந்த ஆனந்தராஜ், தனது மனைவி விஜயபாரதி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்ததாக கூறப்படுகிறது.

இதில் விஜயபாரதி உடல் முழுவதும் தீ பரவியது. அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து தீயை அணைத்து நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி விஜயபாரதி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் நாகை வெளிப்பாளையம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்தராஜை கைது செய்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அபுதாபியிலிருந்து சென்னை வந்த வாலிபர் விமான நிலையத்தில் அரை நிர்வாணமாக ஓடியதால் பரபரப்பு!!
Next post செல்போனில் பேசியதை கண்டித்ததால் வங்கி பெண் ஊழியர் தற்கொலை!!