திருச்சூர் விமான நிலையத்தில் ரூ.4 கோடி போதை மருந்துடன் சிக்கிய இளம்பெண்!!

Read Time:3 Minute, 46 Second

61cf149a-eb37-4cb4-93bb-17baeaaba709_S_secvpfகேரள மாநிலம் திருச்சூர் விமான நிலையம் மூலம் குவைத்துக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள ‘ஹெராயின்’ போதை பொருளை கடத்தல் காரர்கள் கடத்த திட்டமிட்டு உள்ளதாகவும் இந்த போதை மருந்து கடத்தலுக்கு ஒரு பெண்ணை அந்த கும்பல் பயன்படுத்த போவதாகவும் திருச்சூர் விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக விமான நிலையத்தில் பயணிகளை அதிகாரிகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை 5.45 மணிக்கு திருச்சூரில் இருந்து குவைத்துக்குச் செல்லும் குவைத் ஏர்வேஸ் விமானத்தில் பயணம் செய்வதற்காக ஒரு இளம்பெண் வந்தார்.

அவரது உடமைகளை சுங்கா இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அவரது சூட்கேசை அதிகாரிகள் திறந்து பார்த்த போது உள்ளே ரகசிய அறையில் ஒரு பார்சல் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. அதை அதிகாரிகள் சோதனை செய்து பார்த்த போது ‘ஹெராயின்’ என்ற போதை பொருள் இருந்தது தெரியவந்தது.

ஒரு கிலோ எடை உள்ள அந்த போதை மருந்தின் சர்வதேச மதிப்பு ரூ.4 கோடியாகும். இதைத் தொடர்ந்து அந்த பெண்ணை அதிகாரிகள் கைது செய்து தீவிர விசாரணையில் இறங்கினார்கள்.

அப்போது போதை மருந்து கடத்தல் பற்றி பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

கைது செய்யப்பட்ட அந்த பெண்ணின் பெயர் சிமி(வயது40). திருச்சூர் கொற்றநல்லூர், கனககுன்று பகுதியைச் சேர்ந்தவர். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். கணவரை பிரிந்து தாய் வீட்டில் வசித்து வந்த சிமி குவைத்து நாட்டில் ஒரு பரிசோதனை கூடத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். வருடத்திற்கு ஒரு முறை சொந்த ஊருக்கு வந்து மகள்களையும் தாயாரை பார்த்துச் செல்வது வழக்கம்.

அதன்படி கடந்த டிசம்பர் மாதம் திருச்சூர் வந்த சிமி நேற்று குவைத் திரும்ப விமான நிலையம் வந்த போது போதை மருந்து கடத்தியதாக சிக்கிக் கொண்டார்.

திருச்சூரைச் சேர்ந்த ஒரு போதை மருந்து கடத்தல் கும்பல் சிமியிடம் பண ஆசை காட்டி இந்த போதை மருந்தை கொடுத்து குவைத்தில் அவர்கள் ஆட்களிடம் கைமாற்றி விட திட்டமிட்டதும் விசாரணையில் தெரியவந்தது. பல ஆண்டுகளாக சிமி இது போல ஹெராயின் கடத்தலில் ஈடுபட்டு உள்ளார்.

தற்போது தான் அவர் பிடிபட்டு உள்ளார். சிமிக்கு போதை மருந்து கொடுத்த அந்த கும்பலை பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அந்த கும்பலை கைது செய்யவும் அவர்கள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உத்தரகாண்ட் வெள்ளத்தில் சிக்கி காணாமல் போன மனைவி: 591 நாட்கள் தேடி அலைந்து கண்டுபிடித்த கதாநாயகன்!!
Next post துரைப்பாக்கத்தில் காதல் தோல்வியால் கல்லூரி மாணவர் தற்கொலை!!