நாமக்கல் அருகே மனைவியை கள்ளக்காதலனுடன் அனுப்பிய கணவன்!!

Read Time:4 Minute, 58 Second

ae2d7104-03b0-437c-b78d-08f9e679c95c_S_secvpfகாவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யவில்லை, நீதிமன்றம் செல்லவில்லை, வழக்கறிஞர்கள் வாதாடவில்லை, ஆண்டு கணக்கில் தீர்ப்புக்காக காத்திருக்கவில்லை, ஒரு பைசாக்கூட செலவு இல்லை, நீதிபதி தீர்ப்பு கூறவில்லை.

ஆனால் மனைவியை கணவனிடம் இருந்து பிரித்து கள்ளக்காதலுடன் சேர்த்து அனுப்பி வைத்த சம்பவம் மோகனூர் பகுதியில் நடந்து உள்ளது.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்த நன்செய் இடையாற்றை சேர்ந்த குள்ளமான ஒருவருக்கும், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த 13 ஆண்டுக்கு முன்பு பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் நடந்துள்ளது. தற்போது இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

இவர்கள் தற்போது மோகனூரில் வசித்து வருகின்றனர். அவர் சைக்கிள் பழுது பார்க்கும் தொழில் நடத்தி வருகிறார். அவர் தனது மனைவிக்கு வாத்து கோழி கறிக்கடை வைத்து கொடுத்தார்.

இந்த கடைக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு மோகனூர் பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் ஒருவர் வாத்து கோழி கறி வாங்க கடைக்கு வந்தார். அப்போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. தனது கணவன் சைக்கிள் பழுது பார்க்கும் கடைக்கு சென்ற நேரத்தில் இருவரும் சந்தித்து வந்தனர். லாரி டிரைவருக்கு திருமணம் நடந்து குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு, இவரது மனைவி இறந்து விட்டார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பெண் ஊருக்கு சென்று வருவதாக கூறி சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. லாரி டிரைவரும், அந்த பெண்ணும் மோகனூரில் ஒரு பகுதியில் தனியாக வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்தனர். இதனை அறிந்த அவரது கணவர், ஊரில் உள்ள பெரியவர்களை அழைத்துக்கொண்டு அங்கு சென்று விசாரித்தார். அதற்கு அந்த பெண் கணவரோடு வாழ பிடிக்கவில்லை என்று தெரிவித்தார்.

அவர்கள் 3 பேரையும் பெரியவர்கள் அழைத்து விசாரித்த போது, எனக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தி விட்டாள். அதனால் அவளோடு வாழ முடியாது என்று பெண்ணின் கணவர் தெரிவித்தார். அதற்கு அந்த பெண்ணும், தனது கணவருடன் வாழ முடியாது என்று தெரிவித்தார். அப்போது, அவளது கள்ளக்காதலன், அவர் மனைவி வேண்டாம் என்றால், நான் அந்த பெண்ணை மனைவியாக ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தார்.

இதனால், அவர்கள் முன்னிலையில் இருவரும் பிரிந்து வாழ்வதாக எழுதிக்கொடுத்து உள்ளனர். அதனை பெற்றுக்கொண்ட அவர்கள், அந்த பெண்ணின் கணவருக்கு சேர வேண்டிய பொருட்களை அவரிடம் கொடுத்து விடுமாறு தெரிவித்து உள்ளனர். மேலும், பெண் குழந்தைகள் இருவரும் தந்தை வளர்த்து கொள்ள வேண்டியது என்று அவர்கள் முன்னிலையில் முடிவு செய்யப்பட்டு உள்ளது. அந்த பெண் நியாயம் பேசியவர்களிடம் சென்று வருவதாக சொல்லிவிட்டு, தனது காதலுடன் சேர்ந்து வண்டியில் ஏறி புறப்பட்டு சென்று விட்டார். வழக்கு பதிவு இல்லை, நீதி மன்றம் செல்லவில்லை, ஆண்டு கணக்கில் பிரிவுக்காக காத்திருக்கவில்லை, வழக்கறிஞர்கள் நீதி மன்றத்தில் மணிக்கணக்கில் வாதாட வில்லை. நீதிபதி தீர்ப்பு வழங்கவில்லை.

ஒரு ரூபாய் கூட செலவு இல்லாமல், தனது கணவரை விவாகரத்து செய்யாமல், இருவரும் ஒருவருக்கு ஒருவர் பிடிக்கவில்லை எனவே, நாங்கள் இருவரும் பிரிகிறோம் என்று ஒரு வெள்ளை பேப்பரில் எழுதி கொடுத்ததை வைத்து, கள்ளக்காதலுடன் அந்த பெண்ணை சேர்த்து அனுப்பி வைத்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆண்டிப்பட்டியில் 8 மாணவிகளிடம் அரசு பள்ளி ஆசிரியர் சில்மிஷம்!!
Next post கற்பழித்த பெண்ணை கரம் பிடித்த சிலமணி நேரத்தில் தவிக்கவிட்டு மாயமான மினி பஸ் கண்டக்டர்!!