பட்டபகலில் ரோட்டில் சென்ற பெண்ணை தாக்கி நகை பறிக்க முயன்ற வாலிபருக்கு தர்மஅடி!!

Read Time:2 Minute, 40 Second

779bac62-5a59-4015-a5c3-94d4461359c0_S_secvpfகோவை ராமநாதபுரம் ஒலம்பஸ் அருகேயுள்ள கணேசபுரத்தை சேர்ந்தவர் சிதம்பரம். இவரது மனைவி சிவகாமி சுந்தரி (வயது 64). இவர் நேற்று 100 அடி ரோட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் உறவினர் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு வீடு திரும்புவதற்காக பஸ் நிறுத்தத்துக்கு ரோட்டில் நடந்து சென்றார்.

அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர் ஒருவர் சிவகாமி சுந்தரி கழுத்தில் அணிந்திருந்த நகையை பறிக்க முயன்றார். சுதாகரித்துக் கொண்ட சிவகாமி சுந்தரி அந்த வாலிபரிடம் போராடினார். அப்போது சிவகாமி சுந்தரி தவறி கீழே விழுந்தார்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த பகுதி பொதுமக்கள் திரண்டு வந்து நகையை பறிக்க முயன்ற வாலிபரை துரத்தி மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்தனர். பின்னர் அந்த வாலிபரை ரத்தினபுரி போலீசில் ஒப்படைத்தனர்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது கைதான வாலிபர் அனிஷ்ரகுமான் (வயது 23) என்பதும், இவன் மீது பீளமேடு, சரவணம்பட்டி உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் வழக்கு நிலுவையில் உள்ளதும் தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதேபோல் பெண்ணிடம் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் நகை பறித்து சென்ற சம்பவம் நடந்தது. பீளமேடு ஹோப் காலேஜ் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 36). இவர் கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் விஜயலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க நகையை பறித்துக் கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் மறைந்தனர்.

இதுகுறித்து விஜயலட்சுமி பீளமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குழந்தைகள் பருவம் அடைய உயிருக்கு ஆபத்தான ஆக்சிடோசின் ஊசியை பயன்படுத்தும் விபசார கும்பல்!!
Next post கல்லூரி பேராசிரியையை கடத்தி சென்ற வாலிபர்: போலீஸ்காரர் மனைவியை ஏமாற்றியதும் அம்பலம்!!