சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு ஆஜரானார் சுனந்தா புஷ்கரின் மகன் ஷிவ் மேனன்!!

Read Time:1 Minute, 55 Second

a759b4d9-6063-47a7-a568-eefc1ac38391_S_secvpfமுன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் டெல்லி ஓட்டல் அறையில் பிணமாக கிடந்தார். அவரது மரணம் தற்கொலை என்று முதலில் கூறப்பட்டாலும், பின்னர் அது கொலை வழக்காக மாற்றப்பட்டது. இந்த கொலை வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவும் அமைக்கப்பட்டது.

பின்னர் அக்குழுவினர் சசி தரூரின் உதவியாளர் உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடத்தினர். அதன் பின் விசாரணைக்கு ஆஜராகுமாறு சசி தரூருக்கு சிறப்பு புலனாய்வு குழு சம்மன் அனுப்பியது. சசி தரூரும் சம்மனை பெற்றுக்கொண்டு புலனாய்வு குழு முன் ஆஜராகி 50-க்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார்.

இதே போல் முன்னாள் எம்.பி. அமர் சிங் விசாரணையில் பங்கேற்று போலீசாரின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது சுனந்தாவின் மகன் ஷிவ் மேனனுக்கும் விசாரணைக்கு வருமாறு சம்மன் அனுப்பப்பட்டது. அவர் துபாயில் இருந்ததால், விசாரணைக்கு ஆஜராவதில் தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில் இன்று அவர் சிறப்பு புலனாய்வு குழு முன் ஆஜராகி போலீசாரின் கேள்விகளுக்கு பதிலளித்தார். எனினும் அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகள் பற்றியும், அவரது அளித்த பதில் குறித்தும் எவ்வித விவரமும் வெளிவரவில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நெல்லையில் அரசு பஸ்சில் இளம்பெண்ணுடன் கொஞ்சி குலவிய போலீஸ்காரர்: பயணிகள் முகம் சுழிப்பு!!
Next post 3 பெண்களை பற்றிய புதுப்படத்தில் நடிக்கும் திரிஷா!!