மாரி படத்தில் சேரி தலைவனாக நடிக்கும் தனுஷ்!!

Read Time:1 Minute, 32 Second

a1cd58da-b1f0-4b51-81b6-a6da362a8c60_S_secvpf‘காதலில் சொதப்புவது எப்படி’, ‘வாயை மூடி பேசவும்’ ஆகிய படங்களை இயக்கிய பாலாஜி மோகன் தனுஷை வைத்து ‘மாரி’ என்னும் படத்தை இயக்கிவருகிறார். இதில் தனுஷுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். மேலும், இப்படத்தில் பின்னணி பாடகரான விஜய் யேசுதாஸ், மற்றும் ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

இப்படத்தை தனுஷின் ‘வுண்டர்பார் பிலிம்ஸ்’ நிறுவனமும், ராதிகா சரத்குமாரின் ‘மேஜிக் பிரேம்ஸ்’ நிறுவனமும் இணைந்து பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவை செய்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர் வெளியானது. இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்தில் தனுஷ் சேரி தலைவனாக நடிக்கிறார். மேலும் சென்னை லோக்கல் பாஷையும் பேசுகிறார். இப்படத்தின் அடுத்தக் கட்ட படப்பிடிப்பினை சென்னையில் உள்ள குடிசைப் பகுதிகளிலும் திருவல்லிக்கேணி மார்க்கெட் பகுதிகளிலும் நடத்தவுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாண்டிராஜ் படத்தில் நடிக்கும் அமலாபால்?
Next post ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 6 மாத கர்ப்பிணி பெண்ணுக்கு காதலனுடன் திருமணம்!!