ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 6 மாத கர்ப்பிணி பெண்ணுக்கு காதலனுடன் திருமணம்!!

Read Time:2 Minute, 11 Second

d7ffa5bb-7097-4539-9f97-d096ca38b9be_S_secvpfசேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள செலவடை அரியாம்புதூர் பகுதியை சேர்ந்த துரைசாமியின் மகள் லதா. 22 வயதான இவர் வீட்டில் இருந்து வருகிறார். இவரது அண்ணன் ராஜா அதே பகுதியில் சலூன் கடை வைத்து நடத்தி வருகிறார்.

அதே பகுதியை சேர்ந்த வடிவேல் (30) என்பவர் லதா அண்ணன் ராஜா நடத்தும் சலூன் கடையில் வேலை செய்து வந்தார். இதனால் வடிவேலுவும் லதாவும் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததால் இருவரும் காதலித்து வந்தனர்.

வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனிமையில் சந்தித்து காதலை வளர்த்து வந்தனர். இதனால் லதா 6 மாத கர்ப்பம் ஆனார். இது லதாவின் பெற்றோருக்கு தெரிய வந்தது. ஊர் பெரியவர்கள் முன்னிலையில் வடிவேலுவிடம் பேச்சுவர்த்தை நடத்தினர். இருந்தும் திருமணம் செய்து கொள்ள அவர் மறுத்துவிட்டார்.

இதனால் வேதனை அடைந்த லதா இது குறித்து ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வடிவேல் மற்றும் உறவினர்களிடம் மகளிர் காவல் ஆய்வாளர் காஞ்சனா விசாரணை நடத்தினார். அப்போது இரு வீட்டார் உறவினர்களிடையே காரசார விவாதம் நடைபெற்றது.

இந்த விசாரணையில் லதாவை வடிவேலு கர்ப்பம் ஆக்கியது தெரியவந்தது. இதை அடுத்து போலீசார் அறிவுறுத்தலின் பேரில் இரு வீட்டார் சம்மதத்துடன் லதாவை வடிவேல் திருமணம் செய்து கொண்டார். 6 மாத கர்ப்பிணி பெண்ணுக்கு காவல் நிலையத்தில் திருமணம் நடைபெற்றது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மாரி படத்தில் சேரி தலைவனாக நடிக்கும் தனுஷ்!!
Next post பெண் கொடுக்க மறுத்ததால் சினிமா பாணியில் 10–ம் வகுப்பு மாணவியை காரில் கடத்திய கும்பல்!!