ராஜஸ்தானில் பன்றிக்காய்ச்சலுக்கு மேலும் 10 பேர் சாவு-பலி எண்ணிக்கை 62 ஆக உயர்ந்தது!!

Read Time:2 Minute, 5 Second

f9ec3ae7-24e8-4df2-8dc9-c67937c1359c_S_secvpfராஜஸ்தானில் பன்றிக்காய்ச்சலுக்கு மேலும் 10 பேர் உயிரிழந்ததையடுத்து இந்த ஆண்டில் இதுவரை இம்மாநிலத்தில் பன்றிக்காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது.

எச்1 என்1 என்ற வைரஸ் மூலம் உலகின் பல நாடுகளில் பன்றிக்காய்ச்சல் பரவியுள்ளது.

பன்றிகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் இந்த நோய் கடந்த 2009–ம் ஆண்டு இந்தியாவில் பல மாநிலங்களில் பரவி மக்களிடம் பீதியை ஏற்படுத்தியது. அந்த ஆண்டு பன்றிக்காய்ச்சலுக்கு சுமார் ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர்.

ஐந்து ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு தற்போது பன்றிக்காய்ச்சல் இந்தியா முழுவதும் பரவியுள்ளது. குறிப்பாக தெலுங்கானா, ராஜஸ்தான், டெல்லி, குஜராத் ஆகிய 4 மாநிலங்களில் பன்றிக்காய்ச்சல் மிக, மிக வேகமாக பரவியபடி உள்ளது. தெலுங்கானாவில் பன்றிக்காய்ச்சலின் தாக்கம் அதிகமாக உள்ளது.

ராஜஸ்தானில் மட்டும் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 366 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்நிலையில், பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவந்த பிகானர் மற்றும் அஜ்மீர் மாவட்டங்களை சேர்ந்த தலா இருவரும், ஜெய்ப்பூர், பார்மர், கோட்டா, உதய்பூர், பன்ஸ்வாரா, சிட்டோகர் மாவட்டங்களை சேர்ந்த தலா ஒருவரும் அடுத்தடுத்து உயிரிழந்ததையடுத்து, இன்றைய நிலவரப்படி பலி எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் லட்டு தயாரிக்கும் அறையில் ரூ.10 லட்சம் நெய் டின்கள் திருட்டு!!
Next post நாட்டிலேயே புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் வாழும் மாநிலத்தில் மிசோரம் முதலிடம்!!